/
உள்ளூர் செய்திகள்
/
விழுப்புரம்
/
ரூ. 2.50 லட்சம் புயல் நிவாரண பொருட்கள்
/
ரூ. 2.50 லட்சம் புயல் நிவாரண பொருட்கள்
ADDED : டிச 06, 2024 04:54 AM

நிறம் மற்றும் எழுத்துரு அளவு மாற்ற
அவலுார்பேட்டை : மேல்மலையனுார் ஒன்றியம் சார்பில் 2.50 லட்சம் ரூபாய் மதிப்பீட்டில் புயல் நிவாரண பொருட்கள் அனுப்பி வைக்கப்பட்டது.
பெஞ்சல் புயன் கனமழை காரணாக பாதிக்கப்பட்ட மக்களுக்காக மேல்மலையனுார் ஒன்றியம் சார்பில் 2.50 லட்சம் ரூபாய் மதிப்பீட்டில் போர்வைகள், லுங்கிகள், துண்டுகள், அரிசி மூட்டைகள், பிரட், வாட்டர் பாட்டல்கள் உள்ளிட்டவைகளை அனுப்பி வைக்கும் நிகழ்ச்சி நடந்தது.
ஒன்றிய கவுன்சிலர் நெடுஞ்செழியன் தலைமை தாங்கி, நிவாரணப் பொருட்கள் உள்ள வேனை வழியனுப்பி வைத்தார்.
பி.டி.ஓ., சையத் முகமத், ஊராட்சி தலைவர்கள், ஒன்றிய கவுன்சிலர்கள், அலுவலர்கள், பணியாளர்கள் பங்கேற்றனர்.