/
உள்ளூர் செய்திகள்
/
விழுப்புரம்
/
முட்டை வியாபாரியிடம் ரூ.5 லட்சம் பறிமுதல்
/
முட்டை வியாபாரியிடம் ரூ.5 லட்சம் பறிமுதல்
ADDED : மார் 20, 2026 09:02 AM

விழுப்புரம்: விழுப்புரம் அருகே முட்டை வியாபாரியிடம் இருந்து 5 லட்சம் ரூபாயை பறக்கும் படையினர் பறிமுதல் செய்தனர்.
விழுப்புரம் தொகுதி தேர்தல் பறக்கும் படை குழுவினர், வருவாய்த்துறை அலுவலர் விக்ரமன் தலைமையில் நேற்று இரவு 8:30 மணிக்கு, கோலியனுார் அடுத்த வாணியம்பாளையம் பகுதியில், கும்பகோணம் நெடுஞ்சாலையில் வாகன சோதனையில் ஈடுபட்டிருந்தனர். அப்போது, நாமக்கல் பகுதியிலிருந்து கோலியனுார் வழியாக முட்டை ஏற்றிச்சென்ற லாரியை நிறுத்தி சோதனை நடத்தினர்.
அப்போது, அந்த லாரியில் உரிய ஆவணங்களின்றி 5 லட்சம் ரூபாய் இருந்தது தெரிய வந்தது. இதனையடுத்து, லாரியை பறிமுதல் செய்த பறக்கும் படையினர், விழுப்புரம் தாலுகா அலுவலகம் கொண்டு வந்து, தேர்தல் அதிகாரியிடம் ஒப்படைத்தனர்.
விழுப்புரம் தொகுதி தேர்தல் அலுவலரான ஆர்.டி.ஓ., முருகேசன், தாசில்தார் யுவராஜ் ஆகியோர், பணத்தை பறிமுதல் செய்து விசாரணை நடத்தி வருகின்றனர்.

