ADDED : அக் 07, 2025 07:21 AM
நிறம் மற்றும் எழுத்துரு அளவு மாற்ற
செஞ்சி; செஞ்சி அடுத்த செவலபுரை கிராமத்தை சேர்ந்தவர் அர்ஜூனன், 63; இவர், கடந்த 3ம் தேதி செஞ்சி, திருவண்ணாமலை சாலையில் உள்ள ஏ.டி.எம்., மையத்திற்கு சென்றார். அங்கிருந்த ஒரு வாலிபரிடம் மினி ஸ்டேட்மென்ட் எடுத்து தரும்படி தனது ஏ.டி.எம். கார்டை கொடுத்துள்ளார். அர்ஜூனனிடம் வேறு ஏ.டி.எம்., கார்டை கொடுத்து சென்ற மர்ம நபர், அர்ஜூனனின் ஏ.டி.எம்., கார்டை பயன்படுத்தி வேறு ஏ.டி.எம்., மையத்தில் 39,500 ரூபாயை எடுத்துள்ளார். நகை கடையில் 16 ஆயிரத்து 250 ரூபாய்க்கு நகை வாங்கி உள்ளார்.
இது குறித்து மொபைல் போனுக்கு மெசேஜ் வந்ததால், ஏமாற்றப்பட்டதை அறிந்த அர்ஜூனன், செஞ்சி போலீசில் புகார் அளித்தார். போலீசார் வழக்குப் பதிந்து மர்ம நபரை தேடி வருகின்றனர்.