/
உள்ளூர் செய்திகள்
/
விழுப்புரம்
/
ஆன்லைனில் பெண்ணிடம் ரூ.6.24 லட்சம் மோசடி
/
ஆன்லைனில் பெண்ணிடம் ரூ.6.24 லட்சம் மோசடி
ADDED : அக் 16, 2024 08:25 AM
விழுப்புரம் : திண்டிவனத்தில் இளம் பெண்ணிடம் பகுதிநேர பணி எனக் கூறி ஆன்லைன் மூலம் 6.24 லட்சம் ரூபாய் மோசடி செய்த நபர் குறித்து போலீசார் விசாரித்து வருகின்றனர்.
திண்டிவனத்தைச் சேர்ந்தவர் எட்டியப்பன் மகள் சசி, 32; இவரது மொபைல் போனில் வாட்ஸ் அப் மூலம் கடந்த மாதம் 22ம் தேதி தொடர்பு கொண்ட நபர் ஒருவர், பகுதிநேர பணி இருப்பதாக கூறியுள்ளார். மேலும், சிறிய தொகையை முதலீடு செய்து டாஸ்க் முடித்தால், அதிக கமிஷன் பெறலாம் என தெரிவித்துள்ளார்.
இதையடுத்து, 25ம் தேதி முதல் கடந்த 13ம் தேதி வரை தனது வங்கி கணக்குகளில் இருந்து மர்ம நபர் அனுப்ப கூறிய வங்கி கணக்குகளுக்கு 6 லட்சத்து 24 ஆயிரத்து 91 ரூபாய் அனுப்பி அனுப்பி டாஸ்க் முடித்துள்ளார். ஆனால், சசிக்கு சேர வேண்டிய தொகை வரவில்லை.
ஏமாற்றப்பட்டதை அறிந்த சசி அளித்த புகாரின் பேரில், விழுப்புரம் மாவட்ட சைபர் கிரைம் போலீசார் வழக்குப் பதிந்து மர்ம நபரை தேடி வருகின்றனர்.