/
உள்ளூர் செய்திகள்
/
விழுப்புரம்
/
அரசு போக்குவரத்துக் கழக பணியாளர் குடும்பத்தினருக்கு ரூ.7.10 கோடி நிதி

ADDED : ஆக 07, 2025 11:30 PM
விழுப்புரம்: அரசு போக்குவரத்துக்கழகத்தில் பணியின்போது இறந்த தொழிலாளர் குடும்பத்தினருக்கு ரூ.7.10 கோடி நிதியுதவி வழங்கப்பட்டது.
விழுப்புரம் கோட்டத்திற்குட்பட்ட, தமிழ்நாடு அரசு போக்குவரத்துக் கழகத்தில், கடந்த ஓராண்டில் பணியின் போது 7 தொழிலாளர்கள் இறந்தனர்.
இவர்களது குடும்பத்திற்கு தலா ரூ.10 லட்சமும், பணியில் அல்லாத போது இறந்த 128 தொழிலாளர்களின் குடும்பங்களுக்கு தலா ரூ.5 லட்சமும் நிவாரண நிதி வழங்கப்பட்டது.
மேலும், அனைத்து தொழிற்சங்கங்களின் ஒத்துழைப்புடன் தொழிலாளர்களிடம் பிடித்தம் செய்த நிதியில் இருந்து, 10 குடும்பத்தினருக்கு தலா ரூ. 5 லட்சம் தொகைக்கான காசோலையை, மேலாண் இயக்குநர் குணசேகரன் வழங்கினார்.
இதன்படி, விழுப்புரம் மண்டலத்தில் 4 குடும்பத்தினருக்கும், வேலுார், காஞ்சிபுரம் மற்றும் திருவள்ளூர் மண்டலத்தில் தலா 2 குடும்பத்தினருக்கும், கடலுார் மற்றும் திருவண்ணாமலை மண்டலத்தில் தலா ஒரு குடும்பத்திற்கும் நிதி வழங்கப்பட்டது.
இந்நிகழ்ச்சியில் பொதுமேலாளர் ரவீந்திரன் (தொழில்நுட்பம்), அலுவலர்கள், பணியாளர்கள் மற்றும் தொழிற்சங்க பிரதிநிதிகள் கலந்து கொண்டனர்.