/
உள்ளூர் செய்திகள்
/
விழுப்புரம்
/
மேல்மலையனுார் கோவிலில் ரூ.73 லட்சம் காணிக்கை வசூல்
/
மேல்மலையனுார் கோவிலில் ரூ.73 லட்சம் காணிக்கை வசூல்
மேல்மலையனுார் கோவிலில் ரூ.73 லட்சம் காணிக்கை வசூல்
மேல்மலையனுார் கோவிலில் ரூ.73 லட்சம் காணிக்கை வசூல்
ADDED : ஏப் 16, 2025 06:13 AM
செஞ்சி : மேல்மலையனுார் அங்காளம்மன் கோவில் உண்டியல் காணிக்கை எண்ணும் பணி நேற்று நடந்தது.
விழுப்புரம் மாவட்டம் மேல்மலையனுார் அங்காளம்மன் கோவில் உண்டியல் எண்ணும் பணி நேற்று காலை 9:00 மணிக்கு துவங்கி நேற்று இரவு 7:00 மணி வரை நடந்தது.
ஹிந்து சமய அறநிலையத்துறை உதவி ஆணையர் சக்திவேல், துணை ஆணையர் சிவலிங்கம், அறங்காவலர் குழு தலைவர் மதியழகன் முன்னிலையில் கோவில் ஊழியர்கள், சேவார்த்திகள் உண்டியல் எண்ணும் பணியில் ஈடுபட்டனர். இதில் ரூ.73 லட்சத்து 61 ஆயிரத்து 483 ரொக்கம், 190 கிராம் தங்கம், 902 கிராம் வெள்ளியை பக்தர்கள் காணிக்கையாக செலுத்தி இருந்தனர்.
ஆய்வாளர் சங்கீதா, அறங்காவலர்கள் சுரேஷ், ஏழுமலை,பச்சையப்பன், சரவணன், வடிவேல், சந்தானம் மேலாளர் மணி ஆகியோர் உடன் இருந்தனர்.