/
உள்ளூர் செய்திகள்
/
விழுப்புரம்
/
மகளிர் சுய உதவி குழுவினருக்கு ரூ. 92.13 கோடி கடன், நலத்திட்ட உதவி
/
மகளிர் சுய உதவி குழுவினருக்கு ரூ. 92.13 கோடி கடன், நலத்திட்ட உதவி
மகளிர் சுய உதவி குழுவினருக்கு ரூ. 92.13 கோடி கடன், நலத்திட்ட உதவி
மகளிர் சுய உதவி குழுவினருக்கு ரூ. 92.13 கோடி கடன், நலத்திட்ட உதவி
ADDED : ஜூன் 12, 2025 12:26 AM

விழுப்புரம் : மகளிர் சுய உதவிக்குழு தின விழாவையொட்டி, மகளிர் சுய உதவிக்குழுவினருக்கு வங்கி கடன் மற்றும் அரசு நலத்திட்ட உதவிகள் வழங்கும் விழா நடந்தது.
விழுப்புரம் அரசு சட்ட கல்லுாரி வளாகத்தில் நடந்த விழாவுக்கு, கலெக்டர் ஷேக் அப்துல் ரகுமான் தலைமை தாங்கினார். தமிழ்நாடு மகளிர் மேம்பாட்டு நிறுவனம் சார்பில் சென்னையில், மகளிர் சுயஉதவி குழுவினருக்கு வங்கி கடன் மற்றும் அரசு நலத்திட்ட உதவிகள் வழங்கப்பட்டது. அதைத் தொடர்ந்து, விழுப்புரத்தில், எம்.எல்.ஏ.,க்கள் பொன்முடி, மஸ்தான், அன்னியூர் சிவா, சிவக்குமார் ஆகியோர், 1,265 மகளிர் சுய உதவி குழுக்களை சேர்ந்த 12,918 உறுப்பினர்களுக்கு ரூ.92.13 கோடி மதிப்பிலான வங்கி கடன் மற்றும் அரசு நலத்திட்ட உதவிகளை வழங்கினர்.
விழாவில் கலெக்டர் ஷேக் அப்துல் ரகுமான் பேசியதாவது;
கடந்த 2021 - 22ம் ஆண்டில் ரூ. 650 கோடி இலக்கு மகளிர் சுயஉதவிக்குழுக்களுக்கு வங்கி கடன் வழங்க நிர்ணயிக்கப்பட்டது. தற்போது இந்தாண்டு ரூ.1015 கோடி வங்கி கடன் வழங்கிட இலக்கு நிர்ணயிக்கப்பட்டுள்ளது. கடந்த நான்கு ஆண்டுகளில் இரு மடங்காக இலக்கீடு அதிகரிக்கப்பட்டுள்ளது. இதற்கு முக்கிய காரணம் மகளிர்களின் வாழ்வாதாரம் மேம்பட வேண்டும் என்பதே ஆகும்.
குறிப்பாக, மகளிர் சுயஉதவி குழுவினர் சிறப்பாக செயல்பட்டு, வங்கி கடனை திரும்ப செலுத்தியதும் மிக முக்கிய காரணமாக கருதப்படுகிறது.
தற்போது அனைத்து துறைகளும் மகளிர் சுயஉதவிக்குழு உறுப்பினர்களை தேடி செல்லும் நிலையே உள்ளது. வங்கி கடன் மற்றும் பிற அரசு நலத்திட்ட உதவிகளை பெற்று கொண்ட அனைத்து மகளிர் சுயஉதவிக்கழு உறுப்பினர்களும் நல்ல முறையில் பயன்படுத்தி வாழ்வாதாரத்தை உயர்த்தி கொள்ள வேண்டும் என தெரிவித்தார்.
மாவட்ட ஊராட்சிக்குழு தலைவர் ஜெயச்சந்திரன், கூடுதல் கலெக்டர் பத்மஜா, பயிற்சி கலெக்டர் வெங்கடேஷ்வரன், நகர்மன்ற சேர்மன் தமிழ்செல்வி பிரபு, மாவட்ட ஊராட்சிக்குழு துணை தலைவர் ஷீலாதேவி சேரன், மகளிர் திட்ட இயக்குநர் சுதா உட்பட அலுவலர்கள் பலர் கலந்து கொண்டனர்.