/
உள்ளூர் செய்திகள்
/
விழுப்புரம்
/
ஸ்கூட்டியில் வைத்திருந்த ரூ.95 ஆயிரம் திருட்டு
/
ஸ்கூட்டியில் வைத்திருந்த ரூ.95 ஆயிரம் திருட்டு
ADDED : ஆக 08, 2025 02:04 AM
செஞ்சி: செஞ்சி அருகே ஸ்கூட்டியில் வைக்கப்பட்ட பணத்தை திருடி சென்ற மர்ம நபர்களை போலீசார் தேடி வருகின்றனர்.
செஞ்சி அடுத்த கல்லாலிப்பட்டு கிராமத்தை சேர்ந்தவர் தனசேகரன், 41; இவர், கடந்த ஜூலை, 28ம் தேதி செஞ்சியில் உள்ள வங்கி ஒன்றில் நகைகளை அடகு வைத்து 59 ஆயிரம் ரூபாய் கடன் பெற்றார்.
அத்துடன் வீட்டில் இருந்து எடுத்து வந்திருந்த 36 ஆயிரம் ரூபாயையும் சேர்த்து மொத்தம் 95 ஆயிரம் ரூபாயை தனது ஸ்கூட்டி பெட்டியில் வைத்தார்.
தொடர்ந்து, திருவண்ணாமலை சாலையில் உள்ள ஓட்டல் முன்பு ஸ்கூட்டியை நிறுத்தி விட்டு சாப்பிட சென்றார். திரும்பி வந்து பார்த்த போது ஸ்கூட்டியில் இருந்த பணம் திருடு போய் இருந்தது.
இது குறித்த புகாரின் பேரில் செஞ்சி போலீசார் வழக்கு பதிந்து மர்ம நபரை தேடி வருகின்றனர்.