தினமலர்
சினிமா
டிவி
Podcast
iPaper
கோயில்கள்
புத்தகங்கள்
Subscription
திருக்குறள்
கடல் தாமரை
Dinamalar Logo

 

/உள்ளூர் செய்திகள்/விழுப்புரம்/ நெல் விற்பனை செய்த 801 விவசாயிகளுக்கு பணம் பட்டுவாடா... ரூ.10.27 கோடி!9 நேரடி கொள்முதல் நிலையங்களில் நிலுவைத் தொகைக்கு தீர்வு

நெல் விற்பனை செய்த 801 விவசாயிகளுக்கு பணம் பட்டுவாடா... ரூ.10.27 கோடி!9 நேரடி கொள்முதல் நிலையங்களில் நிலுவைத் தொகைக்கு தீர்வு

நெல் விற்பனை செய்த 801 விவசாயிகளுக்கு பணம் பட்டுவாடா... ரூ.10.27 கோடி!9 நேரடி கொள்முதல் நிலையங்களில் நிலுவைத் தொகைக்கு தீர்வு


UPDATED : ஜூன் 15, 2026 03:14 PM

ADDED : ஜூன் 15, 2026 03:10 PM

Follow on GoogleFavourite on Google

UPDATED : ஜூன் 15, 2026 03:14 PM ADDED : ஜூன் 15, 2026 03:10 PM


Follow on Google
Latest Tamil News
அ நிறம் | அளவு

-நமது நிருபர்-

விழுப்புரம் மாவட்டத்தில் 9 நேரடி நெல் கொள்முதல் நிலையங்களில் 1,131 விவசாயிகளுக்கு நிலுவையில் இருந்த 18 கோடியில், 801 விவசாயிகளுக்கு 10.27 கோடி ரூபாய் பட்டுவாடா செய்யப்பட்டுள்ளது. விழுப்புரம் மாவட்டத்தில் விவசாயம் பிரதான தொழிலாக உள்ளது. இம்மாவட்டத்தில் அதிகளவில் நெல், கரும்பு, வேர்க்கடலை உளுந்து, எள் மற்றும் பனிப்பயிர் சாகுபடி செய்யப்பட்டு வருகிறது.

இதில், குறுவை, சம்பா மற்றும் நவரை ஆகிய 3 பருவங்களில் விவசாயிகள் நெல் சாகுபடி செய்து வருகின்றனர். இந்த நெற்பயிர்களை அறுவடை செய்து மாவட்டத்தில் உள்ள மார்க்கெட் கமிட்டிகளில் விவசாயிகள் விற்பனை செய்து வருகின்றனர்.

ஆனாலும், தமிழக அரசு மூலம் நெல் சாகுபடி பரப்பளவு அதிகம் உள்ள கிராமங்களில் நேரடி நெல் கொள்முதல் நிலையங்கள் அமைக்கப்பட்டு வருகிறது. விவசாயிகள், மார்க்கெட் கமிட்டிகளுக்கு நெல் மூட்டைகளை எடுத்துச்செல்லாமல் இங்கு விற்பனை செய்து வருகின்றனர்.

அவ்வாறு அமைக்கப்பட்ட கிளியனுார், ஆச்சிப்பாக்கம், தாதாபுரம், பென்னகர், நீர்பெருத்தகரம், வி.சாத்தனுார், காந்தலவாடி, ஒட்டம்பட்டு, ஆனாங்கூர் ஆகிய 9 நேரடி கொள்முதல் நிலையங்களில் மார்ச் மாதம் வரை நெல் கொள்முதல் செய்ததற்கான பணம் பட்டுவாடா செய்யப்படாமல் இருந்தது.

கடந்த 2 மாதத்தில் 1,131 விவசாயிகளுக்கு 18 கோடி ரூபாய் அளவில் பணம் பட்டுவாடா செய்யாமல் நிலுவையில் இருந்தது. இந்த தொகையை உடனடியாக வழங்கக்கோரி, சில தினங்களுக்கு முன் விழுப்புரம் கலெக்டர் அலுவகத்தில் விவசாயிகள் காதில் பூ சுற்றி போராட்டத்தில் ஈடுபட்டனர்.

அப்போது, வேளாண் துறை அதிகாரிகள் பேச்சுவார்த்தை நடத்தி, உடனடியாக பணத்தை பெற்றுத்தர நடவடிக்கை எடுப்பதாக கூறினர்.

அதன்படி, 9 கொள்முதல் நிலையங்களில் நெல் மூட்டைகள் விற்பனை செய்த 1,131 விவசாயிகளில் முதல் கட்டமாக 801 விவசாயிகளுக்கு பணம் பட்டுவாடா செய்யப்பட்டுள்ளது.

இதில், கிளியனுார் 112, ஆச்சிப்பாக்கம் 124, தாதாபுரம் 105, பென்னகர் 102, நீர்பெருத்தகரம் 100, வி.சாத்தனுார் 76, காந்தலவாடி 64, ஒட்டம்பட்டு 55, ஆனாங்கூர் 63 என மொத்தம் 801 விவசாயிகளுக்கு 10 கோடியே 27 லட்சத்து 47 ஆயிரத்து 510 ரூபாய் பட்டுவாடா செய்யப்பட்டுள்ளது.

இந்த நேரடி கொள்முதல் நிலையங்களில் மீதமுள்ள 330 விவசாயிகளுக்கும் விரைவில் நிலுவை தொகையை பட்டுவாடா செய்ய துரித நடவடிக்கை எடுத்துள்ளதாக அதிகாரிகள் தெரிவித்தனர்.

தினமலர் WhatsApp Channel-ல் சேருங்கள்
Latest Tamil news, instantly on WhatsApp
Follow





      Dinamalar
      Follow us