/
உள்ளூர் செய்திகள்
/
விழுப்புரம்
/
மாவட்டத்தில் சாலைகள், பாலம் அமைக்க ரூ.130 கோடி: தமிழக நெடுஞ்சாலை துறைக்கு ஒதுக்கீடு
/
மாவட்டத்தில் சாலைகள், பாலம் அமைக்க ரூ.130 கோடி: தமிழக நெடுஞ்சாலை துறைக்கு ஒதுக்கீடு
மாவட்டத்தில் சாலைகள், பாலம் அமைக்க ரூ.130 கோடி: தமிழக நெடுஞ்சாலை துறைக்கு ஒதுக்கீடு
மாவட்டத்தில் சாலைகள், பாலம் அமைக்க ரூ.130 கோடி: தமிழக நெடுஞ்சாலை துறைக்கு ஒதுக்கீடு
ADDED : செப் 14, 2024 07:39 AM
விழுப்புரம்: விழுப்புரம் மாவட்டத்தில், நெடுஞ்சாலைத்துறை மூலம் ரூ.130 கோடி செலவில், 28 சாலை மேம்பாடு, பாலம் கட்டும் பணிகள் மேற்கொள்ளப்படுகிறது.
தமிழக நெடுஞ்சாலைத்துறை சார்பில், சாலை அகலப்படுத்துதல், சாலையை ஸ்திரப்படுத்தும் பணி, உயர்மட்ட பாலங்கள் கட்டுதல், நகர்ப்புற சாலைகள் மேம்படுத்துதல், தரைப்பாலம் அமைப்பது உள்ளிட்ட பணிகள் மேற்கொள்ள திட்டமிடப்பட்டுள்ளது.
விழுப்புரம் மாவட்டம், திருக்கோவிலுார் தொகுதியில் மாரங்கியூர் - ஏனாதிமங்கலம் சாலையில் கோரையாறு ஆற்றின் குறுக்கே ரூ. 42 கோடி மதிப்பீட்டில் உயர்மட்டப் பாலம் அமைக்கும் பணி, வானுார் தொகுதியில் வெள்ளிமேடுபேட்டையில் இருந்து மயிலம் வழியாக புதுச்சேரி செல்லும் 2 வழி பாதையை, நான்கு வழி சாலையாக மாற்றும் பணி, தழுதாளியில் இருந்து தொள்ளாமூர் வரை ரூ.32 கோடியே 50 லட்சம் செலவில், 5 கி.மீ., சாலை அகலப்படுத்தும் பணி, முண்டியம்பாக்கத்தில் இருந்து புதுச்சேரி செல்லும் சாலையில், 2 வழி சாலையை நான்கு வழி சாலையாக மாற்றிட, ரூ.18 கோடி மதிப்பீட்டில் பணிகள் மேற்கொள்ளப்படுகிறது.
இதேபோல், விக்கிரவாண்டி தொகுதியில், ஆற்காடு - விழுப்புரம் சாலையில் ரூ.2 கோடி மதிப்பீட்டில் சாலை இணைப்பு மேம்பாடு பணி, விழுப்புரம்- மாம்பழப்பட்டு, திருக்கோவிலுார் - பொன்னங்குப்பம் சாலை, காங்கியனுார் வழியாக பள்ளியந்துார் - மல்லிகைபட்டு சாலை மேம்பாடு பணிகள் ரூ.2.30 கோடி மதிப்பீட்டிலும், விழுப்புரத்திலிருந்து மாம்பழப்பட்டு வழியாக திருக்கோவிலுார் செல்லும் சாலை, விழுப்புரம் - திருவண்ணாமலை சாலை மேம்பாடு பணிகள், ரூ.8.6 கோடி மதிப்பீட்டிலும், கல்பட்டு - நத்தமேடு சாலையில் ரூ.2.22 கோடி மதிப்பீட்டில் மேம்பாட்டு பணிகள் மேற்கொள்ளப்படுகிறது.
செஞ்சி தொகுதியில், ரூ.5 கோடி மதிப்பீட்டில், செஞ்சி- வடபாலை சாலை மேம்பாடு, ரூ. 3 கோடியில் பென்னகர் - சமத்தக்குப்பம் சாலை மேம்பாடு, ரூ.1.70 கோடியில் தாழங்குணம் - மேல்வயலாமூர் சாலை மேம்பாடு, ரூ.83 லட்சம் மதிப்பீட்டில் எதப்பட்டு - மன்சூராபாத் சாலை மேம்பாடு,ரூ.1.5 கோடியில் பெரியநொளம்பை சாலை மேம்பாடு பணிகள் மேற்கொள்ளப்படுகிறது.
வானுார் தொகுதியில், ரூ.1.20 கோடி மதிப்பீட்டில் கிளியனுார் வழியாக பிரம்மதேசம் - ரங்கநாதபுரம் சாலை அகலப்படுத்தும் பணி, ரூ.1.60 கோடியில் மயிலம் - காரட்டை சாலை அகலப்படுத்தும் பணி மேற்கொள்ளப்படுகிறது.
திண்டிவனம் தொகுதியில், ரூ. 3.80 கோடியில் ஏப்பாக்கம் - ஓங்கூர் சாலையை அகலப்படுத்தி, மேம்படுத்துதல், ரூ.20 லட்சம் மதிப்பில் விட்டலாபுரத்தில் சிறுபாலம் அமைத்தல், திண்டிவனம் நகர பகுதியில் ரூ.1.15 கோடி மதிப்பீட்டில் சலை மேம்பாடு பணி மேற்கொள்ளப்படுகிறது.
விழுப்புரம் தொகுதியில், ரூ.3 கோடியில், சேர்ந்தனுார் ரயில்வே பாதை அருகில் சாலை மேம்பாடு, ரூ.2 கோடியில் பானாம்பட்டு - பில்லுார் சாலை மேம்பாடு, ரூ.5.85 கோடியில் விழுப்புரம் நகர பகுதியில் சாலை மேம்பாடு, ரூ.2.15 கோடியில் விழுப்புரம் - பானாம்பட்டு சாலை மேம்பாடு பணி மேற்கொள்ளப்படுகிறது.
மயிலம் தொகுதியில், ரூ.2.82 கோடி மதிப்பீட்டில், கோவிந்தசாமி அரசு கலைக் கல்லுாரி பகுதியில் சாலை இணைப்பு மேம்பாடு, ரூ.1.30 கோடியில் நாட்டார்மங்கலம் - தொண்டூர் (வழி- மேல்ஒலக்கூர்) சாலை, ரூ.3.80 கோடியில் செண்டூர் - மயிலம் சாலை, ரூ. 3.20 கோடியில் ஜெயங்கொண்டான் - பேரணி சாலை ஆகியவை அகலப்படுத்தும் பணி, ரூ.70 லட்சம் மதிப்பில் வெள்ளிமேடுப்பேட்டை - செம்பாக்கம் சாலை மேம்படுத்தும் பணி மேற்கொள்ளப்படுகிறது.
விழுப்புரம் மாவட்டத்தில் நெடுஞ்சாலைத்துறை மூலம், ரூ.130 கோடியே 135 லட்சம் மதிப்பிலான 28 திட்டப் பணிகள் மேற்கொள்ளப்படுகிறது.