தினமலர்
சினிமா
டிவி
Podcast
iPaper
கோயில்கள்
புத்தகங்கள்
Subscription
திருக்குறள்
கடல் தாமரை
Dinamalar Logo

 

/உள்ளூர் செய்திகள்/விழுப்புரம்/மாவட்டத்தில் நேரடி நெல் கொள்முதல்... ரூ.235 கோடி!காரீப் பருவ சாகுபடி விவசாயிகள் மகிழ்ச்சி

மாவட்டத்தில் நேரடி நெல் கொள்முதல்... ரூ.235 கோடி!காரீப் பருவ சாகுபடி விவசாயிகள் மகிழ்ச்சி

மாவட்டத்தில் நேரடி நெல் கொள்முதல்... ரூ.235 கோடி!காரீப் பருவ சாகுபடி விவசாயிகள் மகிழ்ச்சி


UPDATED : மே 12, 2026 06:47 PM

ADDED : மே 12, 2026 06:44 PM

Follow on GoogleFavourite on Google

UPDATED : மே 12, 2026 06:47 PM ADDED : மே 12, 2026 06:44 PM


Follow on Google
Latest Tamil News
அ நிறம் | அளவு

விழுப்புரம்: விழுப்புரம் மண்டலத்திற்குட்பட்ட நேரடி நெல் கொள்முதல் நிலையங்கள் மூலம், 235 கோடி ரூபாய் மதிப்பிலான நெல் மூட்டைகள் நடப்பு காரீப் பருவத்தில் கொள்முதல் செய்யப்பட்டுள்ளது.

விழுப்புரம் மாவட்டத்தில், 2025-2026ம் ஆண்டிற்கான காரீப் பருவ நெல் சாகுபடி செய்த விவசாயிகள், அந்தந்த பகுதி மார்க்கெட் கமிட்டிகளில் அறுவடை செய்த நெல் மூட்டைகளை விற்பனை செய்து வருகின்றனர்.

இந்தாண்டு, தமிழ்நாடு நுகர்பொருள் வாணிபக்கழக நிறுவனத்தின் சார்பில், 75 இடங்களில் நேரடி நெல் கொள்முதல் நிலையங்கள் கடந்த ஜனவரி மாதம் துவங்கப்பட்டது.

மேலும், காரீப் பருவ அறுவடைப் பணிகள் அதிகம் உள்ள பகுதிகளைக் கண்டறிந்து, செஞ்சி அடுத்த கெங்கபுரம், விழுப்புரம் அடுத்த காணை, திண்டிவனம் அடுத்த தீவனுார் ஆகிய நேரடி கொள்முதல் நிலையங்களில், கூடுதலாக ஒரு நெல் துாற்றும் இயந்திரம் அமைக்கப்பட்டுள்ளது.

ரூ.187 கோடி தமிழ்நாடு நுகர்பொருள் வாணிபக் கழகத்தின் விழுப்புரம் மண்டல மேலாளர் தேன்மொழி மேற்பார்வையில், மாவட்டத்தில் இது வரை 75 நேரடி நெல் கொள்முதல் நிலையங்கள் செயல்பட்டு வருகிறது. இவற்றின் மூலம் 23 ஆயிரத்து 550 விவசாயிகளிடமிருந்து 73 ஆயிரத்து 706.080 மெட்ரிக் டன் நெல் கொள்முதல் செய்யப்பட்டுள்ளது. இதுவரை, விவசாயிகளின் விளைபொருட்களுக்கு, 187 கோடியே 47 லட்சத்து 37 ஆயிரத்து 795 ரூபாய் பட்டுவாடா செய்யப்பட்டுள்ளது.

என்.சி.சி.எப்., மாவட்டத்தில், தேசிய நுகர்வோர் கூட்டுறவு இணையம் என்ற மத்திய அரசின் கூட்டுறவு நிறுவனத்தின் மூலம், காந்தலவாடி, ஆனாங்கூர், வி.சாத்தனுார், ஒட்டம்பட்டு, பென்னகர், நீர்பெருத்தகரம், ஆட்சிப்பாக்கம், கிளியனுார், தாதாபுரம் ஆகிய 9 இடங்களில் நேரடி நெல் கொள்முதல் நிலையங்கள் செயல்பட்டு வருகிறது.

இந்த நிலையங்களில், 47 கோடியே 96 லட்சத்து 28 ஆயிரத்து 650 ரூபாய் மதிப்பில் நெல் கொள்முதல் செய்யப்பட்டுள்ளது. இதன் மூலம், 4,349 விவசாயிகள் பயன் அடைந்துள்ளனர்.

மாவட்டத்தில் மத்திய, மாநில அரசு நிறுவனங்கள் சார்பில் அமைத்துள்ள 84 நேரடி நெல் கொள்முதல் நிலையங்கள் மூலம், 27 ஆயிரத்து 899 விவசாயிகள் பயனடைந்துள்ளனர். விவசாயிகள் விற்பனை செய்த நெல்லுக்கான தொகை 235 கோடியே 43 லட்சத்து 66 ஆயிரத்து 445 ரூபாய் பட்டுவாடா செய்யப்பட்டுள்ளது.

அரவைக்கு சப்ளை மாவட்டத்தில் நுகர்பொருள் வாணிபக் கழக நிறுவனம் சார்பில் 75 இடங்களில் நேரடி நெல் கொள்முதல் செய்யப்படுகிறது. இந்த நெல் மூட்டைகள், 9 தனியார் அரவை முகவர்களுக்கும், மீதமுள்ள நெல், வேளாண் விற்பனை துறைக்கு சொந்தமான கீழ்எடையாளம் திறந்தவெளி சேமிப்பு கிடங்கிற்கு 10 ஆயிரம் மெட்ரிக் டன் மற்றும் டி.என்.சி.சி.,க்கு சொந்தமான அப்பனந்தல் திறந்தவெளி சேமிப்பு கிடங்கிற்கு 20 ஆயிரம் மெட்ரிக் டன் என அனுப்பி வைக்கப்பட்டுள்ளது. மேலும், சென்னை (வடக்கு) மற்றும் வேலுார் ஆகிய மண்டலங்களுக்கு தொடர்ந்து, நெல் அரவைக்கு அனுப்பபட்டு வருகி்றது.



தினமலர் WhatsApp Channel-ல் சேருங்கள்
Latest Tamil news, instantly on WhatsApp
Follow





      Dinamalar
      Follow us