/
உள்ளூர் செய்திகள்
/
விழுப்புரம்
/
இட்லிக்கு 30 ரூபாய் வசூல் ரூ.30,000 தண்டம் விதிப்பு
/
இட்லிக்கு 30 ரூபாய் வசூல் ரூ.30,000 தண்டம் விதிப்பு
இட்லிக்கு 30 ரூபாய் வசூல் ரூ.30,000 தண்டம் விதிப்பு
இட்லிக்கு 30 ரூபாய் வசூல் ரூ.30,000 தண்டம் விதிப்பு
ADDED : ஏப் 29, 2025 07:33 AM
விழுப்புரம் : விழுப்புரம், வழுதரெட்டியைச் சேர்ந்தவர் ஆரோக்கியசாமி, 55; இவர், 2022 செப்., 23ல், மதுரை - சென்னை வைகை எக்ஸ்பிரஸ் ரயிலில் பயணித்தார். திருச்சி ரயில் நிலையம், வசந்தம் கேட்ரிங்கில், 30 ரூபாய் விலையில், இரு இட்லி பார்சல்களும், இரு வடை, 20 ரூபாய் என, மொத்தம், 80 ரூபாய்க்கு வாங்கினார்.
அதற்கு ரசீது கேட்டபோது, ஊழியர் தரவில்லை. இட்லி பார்சலில், அதிகபட்ச விலை, 26 ரூபாய் என குறிப்பிட்டிருந்ததால், இரண்டு பார்சலுக்கு, கூடுதலாக வாங்கிய 8 ரூபாயை திரும்ப கேட்டார். ஊழியர் அலட்சியமாக பதிலளித்தார்.
விழுப்புரம் ரயில் நிலையத்திற்கு வந்த ஆரோக்கியசாமி, திருச்சி கோட்ட ரயில்வே மேலாளர் மற்றும் தனியார் கேட்ரிங் நிறுவன உரிமையாளருக்கு, தன்னிடம் கூடுதலாக வாங்கிய 8 ரூபாயை வழங்கும்படி, கடிதத்தில் புகார் தெரிவித்தார்.
விசாரித்த ரயில்வே அதிகாரி, கேட்ரிங் நிறுவனத்திற்கு 1,000 ரூபாய் அபராதம் விதித்தார். ஆனால், ஆரோக்கியசாமிக்கு 8 ரூபாயை வழங்கவில்லை.
இது குறித்து, விழுப்புரம் நுகர்வோர் கோர்ட்டில், ஆரோக்கியசாமி வழக்கு தொடர்ந்தார். இதில், 8 ரூபாய் கூடுதல் கட்டணம் வசூலித்து, மன உளைச்சலை ஏற்படுத்திய கேட்ரிங் நிர்வாகம், 20,000 ரூபாய் நஷ்ட ஈடு தரவும், வழக்கு செலவாக, 10,000 ரூபாயை புகார்தாரருக்கு 45 நாட்களுக்குள் வழங்கவும், மேலும், அந்த 8 ரூபாயையும் திருப்பி கொடுக்கவும், நீதிபதி உத்தரவிட்டார்.

