/
உள்ளூர் செய்திகள்
/
விழுப்புரம்
/
செஞ்சியில் 2 மணி நேரத்தில் ரூ.60 உயர்ந்த கோழி இறைச்சி
/
செஞ்சியில் 2 மணி நேரத்தில் ரூ.60 உயர்ந்த கோழி இறைச்சி
செஞ்சியில் 2 மணி நேரத்தில் ரூ.60 உயர்ந்த கோழி இறைச்சி
செஞ்சியில் 2 மணி நேரத்தில் ரூ.60 உயர்ந்த கோழி இறைச்சி
ADDED : நவ 01, 2024 06:25 AM
செஞ்சி: செஞ்சியில் தீபாவளி பண்டிகை விற்பனை அதிகரித்ததால் பிராய்லர் கோழி விலை 2 மணி நேரத்தில் கிலோவிற்கு ரூ.60 உயர்ந்தது.
தீபாவளி பண்டிகையை முன்னிட்டு, செஞ்சியில் நேற்று முன்தினம் இரவே இறைச்சி கடைகளில் ஆடு, பிராய்லர் கோழி விற்பனை துவங்கியது.
நேற்று அதிகாலையில் இறைச்சி கடைகளில் கூட்டம் அலை மோதியது. ஆட்டிறைச்சி கிலோ ரூ.900க்கு விற்பனை செய்தனர்.
காலையில் பிராய்லர் கோழி கிலோ ரூ.200க்கு விற்பனை செய்தனர். 10:00 மணியளவில் பெரும்பான்மையான கடைகளில் பிராய்லர் கோழி தீர்ந்து போனது.
இருப்பு இருந்த சில கடைகளில் பிராய்லர் கோழின் விலையை திடீரென உயர்ந்தி கிலோ ரூ.260க்கு விற்பனை செய்தனர். நாட்டு கோழி கிலோ ரூ.400 முதல் ரூ.450 வரை விற்பனையானது.
இதே போல் மீன் மார்க்கெட்டிலும் கூட்டம் அலை மோதியது. வஞ்சரம் கிலோ 800, ஷீலா, சங்கரா, நண்டு, இறால் ஆகியன ரூ.300 முதல் ரூ.350 வரை விற்பனையானது.