
நிறம் மற்றும் எழுத்துரு அளவு மாற்ற
செஞ்சி : செஞ்சி அடுத்த மேலச்சேரி பிரகன்நாயகி சமேத ஸ்ரீ மத்தளேஸ்வரர் கோவிலில் உலக நன்மை வேண்டி, ருத்ர ஹோமம் நடந்தது.
அதனையொட்டி, மத்த ளேஸ்வரர், பிரகன்நாயகி, விநாயகர், வள்ளி தெய்வானை சமேத முருகனுக்குசிறப்பு அபிஷேகமும், அலங்காரமும் நடந்தது.
காலை 11:00 மணிக்கு கலச பிரதிஷ்டை செய்து ருத்ர ஹோமம் நடந்தது. தொடர்ந்து கலசாபிஷேகமும் மகா தீபாராதனை நடந்தது. திரளான பக்தர்கள் சுவாமி தரிசனம் செய்தனர்.