/
உள்ளூர் செய்திகள்
/
விழுப்புரம்
/
செஞ்சி ஒன்றியக்குழு கூட்டத்தில் ஆளும் கட்சி கவுன்சிலர் ஆவேசம்
/
செஞ்சி ஒன்றியக்குழு கூட்டத்தில் ஆளும் கட்சி கவுன்சிலர் ஆவேசம்
செஞ்சி ஒன்றியக்குழு கூட்டத்தில் ஆளும் கட்சி கவுன்சிலர் ஆவேசம்
செஞ்சி ஒன்றியக்குழு கூட்டத்தில் ஆளும் கட்சி கவுன்சிலர் ஆவேசம்
ADDED : ஜன 21, 2025 06:52 AM
செஞ்சி: செஞ்சி ஒன்றியக் குழு சாதாரணக் கூட்டம் நேற்று நடந்தது.
சேர்மன் விஜயகுமார் தலைமை தாங்கினார். பி.டி.ஓ., நடராஜன் வரவேற்றார். பின்னர் தீர்மானங்கள் படிக்கப்பட்டன.
கவுன்சிலர் பேசுகையில், அத்தியூர் பகுதி ஆளும் கட்சி கவுன்சிலர் மணி பேசுகையில், என் வார்டிற்கு ரூ.7 லட்சம் மதிப்பில் குடிநீர் குழாய் இணைப்பு பணியை கேட்டிருந்தேன். அதை என்னை கேட்காமல் ஏன் ரத்து செய்தீர்கள். உங்கள் உதவியால் நான் வெற்றி பெற்றிருந்தால் நீட்டிய இடத்தில் கையெழுத்து போட்டு சென்றிருப்பேன். ரூ.60 லட்சம் செலவு செய்து வெற்றி பெற்றேன். நான்காண்டில் ரூ.20 லட்சத்திற்கு மட்டுமே எனது வார்ட்டிற்கு வேலை ஒதுக்கியுள்ளீர்கள். வாக்காளர்களின் கோரிக்கையை நான் நிறைவேற்ற வேண்டாமா என ஆவேசமாக பேசினார்.
தொடர்ந்து சேர்மன் பேசுகையில், அத்தியூர் பகுதியில் உள்ள தச்சம்பட்டு கிராம மக்கள் மூன்று ஆண்டுகளாக உலர்களம் கேட்டு வந்தனர். எனவே அந்த பணியை தேர்வு செய்தோம். நிதிக்கு ஏற்ப பணியை தேர்வு செய்துள்ளோம் என்றார். மேலும், வரும் 27, 28ம் தேதியில் விழுப்புரம் மாவட்டத்திற்கு வருகை தரும் முதல்வர் ஸ்டாலினை வரவேற்க அனைவரும் வருமாறு அழைப்பு விடத்தார்.
வழக்கமாக அமைதியாக நடைபெறும் செஞ்சி ஒன்றியக்குழு கூட்டத்தில், ஆளும் கட்சி கவுன்சிலர் ஆவேசமாக பேசியது பரபரப்பை ஏற்படுத்தியது.

