/
உள்ளூர் செய்திகள்
/
விழுப்புரம்
/
ஊரக வளர்ச்சி துறை அலுவலர் சங்க மாநில செயற்குழு கூட்டம்
/
ஊரக வளர்ச்சி துறை அலுவலர் சங்க மாநில செயற்குழு கூட்டம்
ஊரக வளர்ச்சி துறை அலுவலர் சங்க மாநில செயற்குழு கூட்டம்
ஊரக வளர்ச்சி துறை அலுவலர் சங்க மாநில செயற்குழு கூட்டம்
ADDED : மார் 16, 2025 11:21 PM

விழுப்புரம்; தமிழ்நாடு ஊரக வளர்ச்சி துறை அலுவலர்கள் சங்கத்தின் மாநில செயற்குழு கூட்டம் விழுப்புரத்தில் நடந்தது.
மாநில தலைவர் காந்திமதிநாதன் தலைமை தாங்கினார். பொது செயலாளர் பிரபு ஆண்டறிக்கையும், பொருளாளர் விஜயபாஸ்கர் வரவு செலவு அறிக்கையும் வாசித்தனர். வரும் 20ம் தேதி சென்னை ஊரக வளர்ச்சி மற்றும் ஊராட்சி துறை ஆணையரிடம், மாநில, மாவட்ட நிர்வாகிகள் பங்கேற்கும் பெருந்திரள் முறையீடு இயக்கம் நடத்துதல், கோரிக்கைகள் வலியுறுத்தி வரும் ஏப்., 23ம் தேதி முதல் காலவரையற்ற வேலைநிறுத்த போராட்டம் நடத்துவதாக தீர்மானங்கள் நிறைவேற்றப்பட்டது.
மாநில துணை பொது செயலாளர் மகாலிங்கம், துணை தலைவர்கள் கோபு, இளங்குமரன், வளர்மாலா, செயலாளர்கள் பாலாஜி செந்தில்குமார், கொளஞ்சிவேலு உட்பட பலர் கலந்து கொண்டனர்.
ஏற்பாடுகளை விழுப்புரம் மாவட்ட தலைவர் ஜெய்சங்கர், செயலாளர் ரமேஷ், பொருளாளர் தண்டபானி செய்திருந்தனர்.
துணை தலைவர் சரவணன் நன்றி கூறினார்.