UPDATED : நவ 20, 2026 12:00 AM
ADDED : நவ 19, 2026 08:24 PM

அ நிறம் | அளவு
விழுப்புரம்: தமிழ்நாடு ஊரக வளர்ச்சித்துறை அலுவலர்கள் சங்கம் சார்பில் ஆர்ப்பாட்டம் நடந்தது.
விழுப்புரம் ஊரக வளர்ச்சித்துறை அலுவலம் எதிரில் நடந்த ஆர்ப்பாட்டத்திற்கு, மாவட்ட தலைவர் சிலம்புசெல்வன் தலைமை தாங்கினார். மாவட்ட செயலாளர் ரமேஷ் கோரிக்கை விளக்கவுரையாற்றினார். நிர்வாகிகள் சிவக்குமார், மூர்த்தி வாழ்த்துரை வழங்கினர்.
இதில், வெற்றி வீடு திட்டத்திற்கு தனியாக துணை பி.டி.ஓ., பணியிடம் ஏற்படுத்த வேண்டும் என்பது உள்ளிட்ட பல்வேறு கோரிக்கைகளை வலியுறுத்தி கோஷங் கள் எழுப்பினர்.
மாவட்ட பொருளாளர் தண்டபாணி நன்றி கூறினார்.
