/
உள்ளூர் செய்திகள்
/
விழுப்புரம்
/
ஊரக வளர்ச்சி துறையினர் மறியல் போராட்டம்: விழுப்புரத்தில் 75 பேர் கைது
/
ஊரக வளர்ச்சி துறையினர் மறியல் போராட்டம்: விழுப்புரத்தில் 75 பேர் கைது
ஊரக வளர்ச்சி துறையினர் மறியல் போராட்டம்: விழுப்புரத்தில் 75 பேர் கைது
ஊரக வளர்ச்சி துறையினர் மறியல் போராட்டம்: விழுப்புரத்தில் 75 பேர் கைது
ADDED : ஜன 08, 2025 06:15 AM

விழுப்புரம் : விழுப்புரத்தில் 12 அம்ச கோரிக்கைகளை வலியுறுத்தி மறியல் போராட்டத்தில் ஈடுபட்ட ஊரக வளர்ச்சித்துறையினர் 75 பேர் கைது செய்யப்பட்டனர்.
விழுப்புரம் நகராட்சி திடலில், ஊரக வளர்ச்சி துறை அலுவலர் சங்கத்தினர் கோரிக்கை வலியுறுத்தி ஆர்ப்பாட்டத்தில் ஈடுபட்டனர். மாநில செயற்குழு உறுப்பினர் ரமேஷ் தலைமை தாங்கினார். மாவட்ட துணை தலைவர் சரவணன் முன்னிலை வகித்தார். அரசு ஊழியர் சங்கம் சிவக்குமார், வேளாண்துறை ஊழியர் சங்கம் பார்த்திபன், சி.ஐ.டி.யு., மூர்த்தி வாழ்த்துரை வழங்கினர். மாவட்ட செயலாளர் ஜெய்சங்கர் விளக்க உரையாற்றினார். சிலம்புசெல்வன், பக்தவச்சலம், விஜயகுமார், முருகன் உள்ளிட்ட நிர்வாகிகள், ஊழியர்கள் பலர் கலந்துகொண்டனர்.
தமிழக அரசின் ஊரக வளர்ச்சித்துறையில் காலியாக உள்ள ஊராட்சி செயலாளர் உள்ளிட்ட காலிப்பணியிடங்களை நிரப்ப வேண்டும், ஊராட்சி செயலர்களுக்கு ஓய்வூதியம் உள்ளிட்ட விடுபட்ட உரிமைகளை வழங்க வேண்டும், தேசிய ஊரக வேலை உறுதித்திட்ட கணினி உதவியாளர்கள், தூய்மைப்பாரதத் திட்ட ஒருங்கிணைப்பாளர்கள் அனைவரையும் பணிவரன்முறைப்படுத்த வேண்டும், உள்ளிட்ட 21 அம்ச கோரிக்கைகளை வலியுறுத்தி கோஷமிட்டனர்.
நிறைவாக அவர்கள், திருச்சி சாலையில் பகல் 12.00 மணிக்கு மறியலில் ஈடுபட்டனர். அங்கிருந்த போலீசார், மறியலில் ஈடுபட்ட 15 பெண்கள் உள்ளிட்ட 75 பேரை கைது செய்து, தனியார் மண்டபத்தில் சிறைவைத்து மாலை விடுவித்தனர்.

