ADDED : ஜன 09, 2026 07:49 AM

விழுப்புரம்: விழுப்புத்தில் ஊரக வளர்ச்சித் துறையில் செயல்படும் ஊரக, நகர்ப்புற வாழ்வாதார இயக்க பணியாளர்கள் 14 அம்ச கோரிக்கைகளை வலியுறுத்தி காத்திருப்பு போராட்டத்தில் ஈடுபட்டனர்.
விழுப்புரம் நகராட்சி திடலில் நடந்த போராட்டத்திற்கு, மாவட்ட தலைவர் புஷ்பா தலைமை வகித்தார். செயலாளர் கண்ணகி, பொருளாளர் கவிதா, நிர்வாகிகள் பூங்குழலி, அஞ்சலாட்சி, தாட்சாயினி, ராதிகா, அருணாதேவி, வள்ளி, சரண்யா முன்னிலை வகித்தனர். இந்திய கம்யூ., மாவட்ட செயலாளர் சவுரிராஜன் கண்டன உரையாற்றினார்.
கட்டுமான தொழிற்சங்க மாவட்ட செயலாளர் அரசு, ஊரக வளர்ச்சித்துறை ஊழியர்கள் சங்க மாவட்ட செயலாளர் முருகன், ஏ.ஐ.டி.யூ.சி., மாவட்ட செயலாளர் பொன்னன் ஆகியோர் கோரிக்க உரையாற்றினர்.
போராட்டத்தில், ஆண்டு தோறும் பணி புதுப்பித்தலை கைவிட்டு, பணி நிரந்தரம் செய்ய வேண்டும். பணியாளர்களுக்கு சமவேலைக்கு சம ஊதியம் வழங்க வேண்டும். வருங்கால வைப்பு நிதி காப்பீடு, இறந்த பணியாளர்களின் குடும்பத்திற்கு இழப்பீடு வழங்க வேண்டும் என்பது உட்பட 14 அம்ச கோரிக்கைகளை வலியுறுத்தப்பட்டது.
