/
உள்ளூர் செய்திகள்
/
விழுப்புரம்
/
பொறையாத்தம்மன் கோவிலில் சாகை வார்த்தல் விழா
/
பொறையாத்தம்மன் கோவிலில் சாகை வார்த்தல் விழா
ADDED : ஏப் 27, 2025 04:53 AM

நிறம் மற்றும் எழுத்துரு அளவு மாற்ற
விக்கிரவாண்டி : விக்கிரவாண்டி பொறையாத்தம்மன் கோவிலில் சாகை வார்த்தல் விழா நடந்தது.
விழாவையொட்டி, சுவாமிக்கு சிறப்பு அபிேஷக, ஆராதனை நடந்தது. தொடர்ந்து, நல்ல தண்ணீர் குளக்கரையிலிருந்து சக்தி கரகம் ஜோடித்து ஊர்வலம் வந்து அம்மனுக்கு சாகை வார்த்தல் நடந்தது.
விக்கிரவாண்டி மற்றும் சுற்றுப்புற பகுதிகளைச் சேர்ந்த பொதுமக்கள் திரளாக சுவாமி தரிசனம் செய்தனர். இரவு வாண வேடிக்கையுடன் சுவாமி வீதியுலா நடந்தது. விழா ஏற்பாடுகளை கிராம முக்கியஸ்தர்கள் செய்திருந்தனர்.