ADDED : ஆக 04, 2025 02:26 AM
நிறம் மற்றும் எழுத்துரு அளவு மாற்ற
விழுப்புரம் : விக்கிரவாண்டி தாலுகா, தி.கொசப்பாளையம் கலச காமாட்சி அம்மன் கோவிலில், ஆடி உற்சவம் நடைபெற்றது.
இதையொட்டி, கடந்த ஜூலை, 28 ம் தேதி காலை காமாட்சி அம்மனுக்கு சிறப்பு அபிேஷகம், பால் குட ஊர்வலம், இரவு சுவாமி வீதியுலா நடந்தது.
தொடர்ந்து கடந்த, ஜூலை 30ம் தேதி ஏரிக்கரை அய்யனாரப்பனுக்கு அபிேஷகமும், ஊரணிப் பொங்கல் வழிபாடும் நடைபெற்றது.
இரு தினங்களுக்கு முன், பிடாரி அம்மனுக்கு சிறப்பு அபிேஷகம், பிற்பகலில் கரகம் வீதியுலா, சாகை வார்த்தல், இரவு கும்பம் படைத்தல் நடைபெற்றது. இதில் ஏராளமான பக்தர்கள் கலந்து கொண்டனர்.

