/
உள்ளூர் செய்திகள்
/
விழுப்புரம்
/
இன்று மாட்டுப்பொங்கல் விழா அலங்கார பொருட்கள் விற்பனை
/
இன்று மாட்டுப்பொங்கல் விழா அலங்கார பொருட்கள் விற்பனை
இன்று மாட்டுப்பொங்கல் விழா அலங்கார பொருட்கள் விற்பனை
இன்று மாட்டுப்பொங்கல் விழா அலங்கார பொருட்கள் விற்பனை
ADDED : ஜன 16, 2024 06:36 AM

விழுப்புரம் : விழுப்புரத்தில் மாட்டுப் பொங்கல் விழாவை யொட்டி மாடுகளை அலங் கரிக்கத் தேவையான பொருட்களை விவசாயிகள், பொதுமக்கள் ஆர்வமுடன் வாங்கிச் சென்றனர்.
தைப்பொங்கல் விழாவையொட்டி இன்று மாட்டு பொங்கல் விழா கொண்டாடப்படுகிறது.
விழாவையொட்டி, விவசாயத்திற்கு துணை நிற்கும் மாடுகளை விவசாயிகள், குளிப்பாட்டி, கொம்புகளுக்கு வண்ணம் தீட்டி, சலங்கைகள், கழுத்து மணிகள், அணிகலன்கள் கட்டி அலங்கரித்து வணங்குவர்.
மாலையில், அனைத்து கிராமங்களிலும் மாடுகளை அலங்கரித்து அழைத்து சென்று பொது இடங்களில் வைத்து மாடு விரட்டும் நிகழ்ச்சியும் நடைபெறும்.
இந்த மாட்டு பொங்கல் விழாவிற்காக விழுப்புரத் தில் மாடுகளை அலங்கரிக்கத் தேவைப்படும் பொருட்களை வாங்க பொதுமக்கள் கடைவீதிகளில் திரண்டு மணி, கயிறு, சலங்கைகள் உள்ளிட்டவைகளை ஆர்வமுடன் வாங்கிச் சென்றனர்.
இதனால், விழுப்புரம் காந்தி வீதி, பாகர்ஷா வீதி, காமாராஜர் சாலை உள்ளிட்ட பகுதிகளில், நேற்று காலை முதல் மாலை வரை கூட்டம் அலைமோதியது.