/
உள்ளூர் செய்திகள்
/
விழுப்புரம்
/
போதைப் பொருட்கள் விற்பனை: கட்டுப்படுத்த கலெக்டர் அறிவுரை
/
போதைப் பொருட்கள் விற்பனை: கட்டுப்படுத்த கலெக்டர் அறிவுரை
போதைப் பொருட்கள் விற்பனை: கட்டுப்படுத்த கலெக்டர் அறிவுரை
போதைப் பொருட்கள் விற்பனை: கட்டுப்படுத்த கலெக்டர் அறிவுரை
ADDED : ஜன 03, 2024 12:08 AM

விழுப்புரம் : 'போதைப் பொருட்கள் விற்பனையைக் கட்டுப்படுத்த நடவடிக்கை எடுக்க வேண்டும்' என அலுவலர்களுக்கு கலெக்டர் பழனி அறிவுறுத்தினார்.
சட்டம் ஒழுங்கு பிரச்னைகள், போதைப் பொருட்களின் விற்பனையைக் கட்டுப்படுத்துவது, கடத்தப்படுவதைத் தடுப்பது மற்றும் கண்காணிப்பது குறித்தும் லோக்சபா தேர்தல் முன்னேற்பாடு பணி தொடர்பான, ஆய்வுக் கூட்டம் விழுப்புரத்தில் நேற்று நடந்தது.
கலெக்டர் அலுவலகத்தில் நடந்த கூட்டத்திற்கு, கலெக்டர் பழனி தலைமை தாங்கினார். கூட்டத்திற்குப்பின் அவர் கூறியதாவது:
மாவட்டத்தில் சட்டம் மற்றும் ஒழுங்கு பிரச்சனைகள் ஏற்படாத வகையில் தொடர் கண்காணிப்பு பணிகள் மேற்கொள்ள வேண்டும். கடந்த மாதம், போதைப் பொருட்களுக்கு எதிராக மேற்கொள்ளப்பட்ட நடவடிக்கைகள் மற்றும் கண்காணிப்பு விபரங்கள் குறித்து ஆய்வு மேற்கொள்ளப்பட்டது. தொடர் கண்காணிப்பு மற்றும் சட்ட நடவடிக்கைகள் மேற்கொள்ளவும், சார் நிலை அலுவலர்கள் மற்றும் காவல் துறையினருக்கு அறிவுறுத்தப்பட்டது.
தொடர்ந்து, வரும் லோக்சபா தேர்தல் பணிகள் தொடர்பாக மேற்கொள்ளப்பட வேண்டிய முன்னேற்பாடு பணிகள் குறித்தும், அறிவுரை மற்றும் ஆலோசனைகள் துறை சார்ந்த அலுவலர்களுக்கு வழங்கப்பட்டது,
இவ்வாறு கலெக்டர் பழனி கூறினார்.
கூட்டத்தில் எஸ்.பி., சசாங்சாய், கலெக்டரின் நேர்முக உதவியாளர் (பொது) அரிதாஸ், உதவி ஆணையர் (கலால்) முருகேசன், மாவட்ட குற்றவியல் பிரிவு மேலாளர் வசந்தகுமார் உட்பட அனைத்துத் துறை சார்ந்த அலுவலர்கள் பங்கேற்றனர்.