/
உள்ளூர் செய்திகள்
/
விழுப்புரம்
/
உப்பு ஏற்றி வந்த லாரி கவிழ்ந்து விபத்து
/
உப்பு ஏற்றி வந்த லாரி கவிழ்ந்து விபத்து
ADDED : பிப் 16, 2025 03:42 AM

கோட்டக்குப்பம் : கோட்டக்குப்பம் அருகே உப்பு ஏற்றி சென்ற லாரி தடுப்பு கட்டை மீது மோதி விபத்துக்குள்ளானது.
வேதாரண்யத்தில் இருந்து உப்பு ஏற்றிக் கொண்டு சென்னை திருப்போரூருக்கு நேற்று காலை 5:00 மணிக்கு லாரி சென்று கொண்டிருந்தது. லாரியை நாகப்பட்டினம், கீழ்வேளூரைச் சிவக்குமார், 32: ஓட்டினார்.
கோட்டக்குப்பம், கீழ்புத்துப்பட்டு அருகில் லாரி வந்த போது, சாலை நடுவே உள்ள தடுப்பு கட்டையில் மோதி விபத்துக்குள்ளானது. உப்பு சாலையில் கொட்டியது. லாரி டிரைவர் தப்பியோடினார்.
கோட்டக்குப்பம் போலீசார் சம்பவ இடத்திற்கு சென்று ஜே.சி.பி., மற்றும் கிரேன் உதவியுடன் லாரியை அகற்றினர். இதுகுறித்து போலீசார் வழக்குப் பதிந்து, டிரைவர் சிவக்குமாரிடம் விசாரணை நடத்தியதில், பனி மூட்டம் அதிகமாக இருந்ததால் விபத்து ஏற்பட்டது தெரிந்தது.

