/
உள்ளூர் செய்திகள்
/
விழுப்புரம்
/
போராட்டத்தில் உயிர் நீத்த விவசாயிகளுக்கு வீர வணக்கம்
/
போராட்டத்தில் உயிர் நீத்த விவசாயிகளுக்கு வீர வணக்கம்
போராட்டத்தில் உயிர் நீத்த விவசாயிகளுக்கு வீர வணக்கம்
போராட்டத்தில் உயிர் நீத்த விவசாயிகளுக்கு வீர வணக்கம்
ADDED : ஜூலை 06, 2025 04:23 AM

விழுப்புரம்: விழுப்புரத்தில், விவசாய உரிமை போராட்டத்தில் உயிர் நீத்தவர்களுக்கு வீரவணக்க நாள் நிகழ்ச்சி நடந்தது.
இதையொட்டி, கலெக்டர் பெருந்திட்ட வளாகம் எதிரே, மாவட்ட அனைத்து விவசாயிகள் சங்க கூட்டமைப்பு சார்பில் வீரவணக்க நாள் கடைபிடிக்கப்பட்டது.
கூட்டமைப்பு மாவட்ட செயலர் முருகையன், விவசாய ஒருங்கிணைப்பு குழு சக்திவேல், விவசாய முன்னேற்ற சங்கம் சக்திவேல், நீர்நிலை பாதுகாப்பு சங்கம் அறவாழி, விவசாய சட்ட விழிப்புணர்வு சங்கம் அய்யனார் உள்ளிட்ட நிர்வாகிகள், சங்க பிரதிநிதிகள், உயிர்நீத்த தியாகிகளுக்கு மலரஞ்சலி செலுத்தி கோஷமிட்டனர்.
இதில், போராட்டத்தில் உயிர் நீத்த விவசாயிகளை, உழவர் உரிமை மீட்பு தியாகிகளாக அறிவித்து அரசு கவுரவிக்க வேண்டும்; விவசாய தியாகிகளை கொண்டாட ஜூலை 5ம் தேதியை உழவர் உரிமை மீட்பு தினமாக அறிவிக்க வேண்டும்; என்பன உள்ளிட்ட பல்வேறு கோரிக்கைகள் வலியுறுத்தப்பட்டன.