/
உள்ளூர் செய்திகள்
/
விழுப்புரம்
/
மணல் கடத்தல் 4 பேர் மீது வழக்கு
/
மணல் கடத்தல் 4 பேர் மீது வழக்கு
ADDED : ஜன 14, 2024 05:48 AM
நிறம் மற்றும் எழுத்துரு அளவு மாற்ற
விழுப்புரம் வளவனுார் பகுதியில் மாட்டு வண்டியில் மணல் கடத்தலில் ஈடுபட்ட 4 பேர் மீது போலீசார் வழக்குப்பதிந்தனர்.
விழுப்புரம் அடுத்த ரங்காரெட்டிப்பாளையம் பகுதியில், வளவனுார் சப் இன்ஸ்பெக்டர்கள் சிவகுருநாதன், கலியமூர்த்தி மற்றும் போலீசார் ரோந்துப்பணியில் ஈடுபட்டனர். அப்போது, அந்த வழியாக வந்த 4 மாட்டு வண்டிகளை, சோதனை செய்தனர். அதில், பெண்ணையாற்றில் இருந்து மணல் கடத்தி வந்தது தெரியவந்தது.
இதையடுத்து 4 மாட்டு வண்டிகளையும் பறிமுதல் செய்து, மணல் கடத்தலில் ஈடுபட்ட சொக்கம்பட்டு பாலமுருகன், புதுச்சேரி, கரியமாணிக்கம் அருள்மணி, அர்ஜூனன், வசந்த் ஆகியோர் மீது வழக்குப் பதிந்து விசாரித்து வருகின்றனர்.

