/
உள்ளூர் செய்திகள்
/
விழுப்புரம்
/
மணல் கடத்தல் ஜே.சி.பி., பறிமுதல்
/
மணல் கடத்தல் ஜே.சி.பி., பறிமுதல்
ADDED : ஏப் 22, 2025 07:42 AM
நிறம் மற்றும் எழுத்துரு அளவு மாற்ற
விழுப்புரம் : விழுப்புரம் அருகே மணல் கடத்தலுக்கு பயன்படுத்தி டிப்பர் லாரிகள், ஜே.சி.பி.,யை போலீசார் பறிமுதல் செய்தனர்.
விழுப்புரம் மரகதபுரம் ஆற்றில் நேற்று முன்தினம் ஜே.சி.பி., மூலம் மணல் திருடும் வீடியோ சமூக வலைத்தளத்தில் வைரலானது.
இதைத் தொடர்ந்து, விழுப்புரம் தாலுகா சப் இன்ஸ்பெக்டர் குணசேகர் தலைமையிலான போலீசார், மணல் திருட்டில் ஈடுபடுத்தப்பட்ட 3 டிப்பர் லாரிகள், ஒரு ஜே.சி.பி., வாகனத்தை பறிமுதல் செய்தனர். மணல் கடத்திய மரகதபுரம் ரமேஷ், திவாகர், கபாலிஸ்வரன், கணேசன், பிரபு ஆகியோர் மீது போலீசார் வழக்கு பதிந்து தேடி வருகின்றனர்.

