ADDED : செப் 19, 2026 06:12 PM
அ நிறம் | அளவு
வானுார்: வானுார் அருகே அனுமதியின்றி மணல் கடத்தி வந்த டிராக்டரை கனிம வளத்துறை அதிகாரிகள் பறிமுதல் செய்தனர்.
வானுார் அடுத்த திருவக்கரை பகுதி வழியாக மணல் கடத்தப்படுவதாக விழுப்புரம் கனிம வளத்துறை அதிகாரிகளுக்கு புகார் வந்தது. அதனைத் தொடர்ந்து, சுரங்கம் மற்றும் கனிம வளத்துறை உதவி புவியியலாளர் சுரேஷ்குமார் மற்றும் அதிகாரிகள் நேற்று முன்தினம் இரவு கடகம்பட்டு பகுதியில் வாகன சோதனையில் ஈடுபட்டனர்.
அப்போது, அந்த வழியாக வந்த டிராக்டரை நிறுத்தியபோது டிராக்டரை நிறுத்தி விட்டு டிரைவர் தப்பியோடினார்.
அதிகாரிகள், டிராக்டரை சோதனை செய்ததில், ஒரு யூனிட் மணல் கடத்தி வந்தது தெரிய வந்தது. உடன், டிராக்டரை பறிமுதல் செய்து, வானுார் போலீசில் ஒப்படைத்தனர். போலீசார் வழக்குப் பதிந்து தப்பியோடிய நபரை போலீசார் தேடி வருகின்றனர்.
