ADDED : ஆக 13, 2026 04:41 PM
அ நிறம் | அளவு
திருவெண்ணெய்நல்லுார்: மணல் கடத்திய மினி வேனை போலீசார் பறிமுதல் செய்தனர்.
திருவெண்ணெய்நல்லுார் சப் இன்ஸ்பெக்டர் மாதவன் மற்றும் போலீசார் நேற்று அதிகாலை ஆனத்துார் மலட்டாறு பகுதியில் ரோந்து சென்றனர்.
அப்போது அங்கு சட்டவிரோதமாக மினி வேனில் மணல் கடத்தியவர்கள் போலீசாரை கண்டதும் மணல் கடத்தி வைத்திருந்த வேனை அங்கேயே நிறுத்திவிட்டு தப்பியோடினர்.
இதையெடுத்து போலீசார் மணல் கடத்தி வைத்திருந்த மினி வேனை பறிமுதல் செய்து வழக்கு பதிந்து தப்பியோடியவரை தேடி வருகின்றனர்.
