ADDED : மார் 30, 2025 03:06 AM
நிறம் மற்றும் எழுத்துரு அளவு மாற்ற
திருவெண்ணெய்நல்லூர் : மணல் கடத்திய வாலிபரை போலீசார் கைது செய்தனர்.
திருவெண்ணெய்நல்லுார் சப் இன்ஸ்பெக்டர் மணிவண்ணன் தலைமையிலான போலீசார் ஏமப்பூர், மலட்டாறு பகுதியில் நேற்று முன்தினம் ரோந்து சென்றனர்.
அப்போது மாட்டு வண்டியில் மணல் கடத்திய அதே பகுதியை சேர்ந்த ஏழைத்தம்பி மகன் மணிவண்ணன், 31; என்பவரை கைது செய்து, மணல் கடத்தலுக்கு பயன்படுத்திய மாட்டு வண்டியை பறிமுதல் செய்தனர்.