
நிறம் மற்றும் எழுத்துரு அளவு மாற்ற
விழுப்புரம்: நவராத்திரியை முன்னிட்டு பரதநாட்டியம் மற்றும் சங்கீத உபன்யாசம் நடந்தது.
விழுப்புரம் சங்கரமடத்தில் நவராத்திரியை முன்னிட்டு, ஒன்பது நாட்களுக்கான சிறப்பு வழிபாடு நடந்து வருகிறது.
ஆறாம் நாளான நேற்று முன்தினம் காலை சுகாசினி மற்றும் கன்னியா பூஜை நடந்தது. தொடர்ந்து மாலை சென்னை, ஜனனி சுப்பிரமணியம் என்பவரின் பரதநாட்டியம் நடந்தது.
இதையடுத்து, சென்னையை சேர்ந்த ஸ்ரீநிதி ஆதித்யாவின் சங்கீத உபன்யாசம் நடந்தது. இதில், ஏராளமானோர் பங்கேற்றனர்.
ஏற்பாடுகளை சங்கரமட மேலாளர் ராமமூர்த்தி செய்திருந்தார்.