ADDED : நவ 03, 2024 11:14 PM

விழுப்புரம்: விழுப்புரத்தில், மத்திய அரசின் 'தீபாவளி வித் மை பாரத்' திட்டத்தில் துாய்மைப் பணி நடந்து.
விழுப்புரம் மாவட்ட நேரு யுவகேந்திரா சார்பில், கடந்த 27ம் தேதி முதல் 30ம் தேதி வரை விழுப்புரம் எம்.ஜி.,ரோடு, காய்கறி மார்க்கெட், கே.கே.ரோடு, உழவர் சந்தை, நகராட்சி மருத்துவமனை, ஜானகிபுரம் மொத்த காய்கறி மார்க்கெட் ஆகிய இடங்களில் துாய்மைப் பணி நடந்தது.
விழுப்புரம் நகராட்சி மருத்துவமனை வளாகத்தில், மருத்துவ பணியாளர்களுடன் இணைந்து பொதுமக்களுக்கு நேரு யுவகேந்திரா தொண்டர்கள் சேவையாற்றினர். மேலும், போக்குவரத்து போலீசாருடன் இணைந்து வாகனங்களை ஒழுங்குபடுத்தினர்.
நிகழ்ச்சிக்கு, மாவட்ட இளையோர் ஒருங்கிணைப்பாளர் ராமச்சந்திரன் தலைமை தாங்கினார். முன்னாள் மாவட்ட ஆலோசனை குழு உறுப்பினர் சக்திவேல், சேம்பர்ஸ் ஆப் காமர்ஸ் மாவட்ட தலைவர் ராமகிருஷ்ணன், போக்குவரத்து இன்ஸ்பெக்டர் வசந்த் முன்னிலை வகித்தனர்.
அரசு கல்லுாரி பேராசியர்கள் குணசேகரன், சிவராமன், தேவராஜ், சேவை கரங்கள் நிர்வாகி சரண்யா ஶ்ரீதரன், கைலாஷ் இன்ஸ்டிடியூட் அழகிரி மற்றும் நேரு யுவகேந்திரா தன்னார்வலர்கள் பங்கேற்றனர்.