தினமலர்
சினிமா
டிவி
Podcast
iPaper
கோயில்கள்
புத்தகங்கள்
Subscription
திருக்குறள்
கடல் தாமரை
Dinamalar Logo

 

/உள்ளூர் செய்திகள்/விழுப்புரம்/ துாய்மை பணியாளர்கள் 2வது நாளாக போராட்டம்

 துாய்மை பணியாளர்கள் 2வது நாளாக போராட்டம்

 துாய்மை பணியாளர்கள் 2வது நாளாக போராட்டம்


ADDED : பிப் 18, 2026 03:09 AM

Follow on GoogleFavourite on Google

ADDED : பிப் 18, 2026 03:09 AM


Follow on Google
அ நிறம் | அளவு

கோட்டக்குப்பம்: சம்பள உயர்வு வழங்காத தனியார் நிறுவனத்தை கண்டித்து இரண்டாவது நாளாக ஒப்பந்த துாய்மை பணியாளர்கள் போராட்டத்தில் ஈடுபட்டனர்.

விழுப்புரம் மாவட்டம், கோட்டக்குப்பம் நகராட்சியில் குப்பைகளை தனியார் நிறுவனத்தின் மூலம் நியமிக்கப்பட்டுள்ள 80க்கும் மேற்பட்ட ஒப்பந்த துாய்மை பணியாளர்கள் அகற்றி வருகின்றனர். இதில் பணியாற்றும் ஒப்பந்த தொழிலாளர்கள், தங்களது சம்பளத்தை உயர்த்தி வழங்க வேண்டும்.

பிடித்தம் செய்யப்பட்ட இ.எஸ்.ஐ., மற்றும் வைப்பு நிதிகளை நிலுவையின்றி செலுத்த வேண்டும் என்பது உள்ளிட்ட கோரிக்கைகளை வலியுறுத்தி நேற்று முன்தினம் நகராட்சி அலுவலக வளாகத்தில் போராட்டம் நடத்தினர்.

அவர்களிடம் நிறுவனத்தை சேர்ந்தவர்கள் பேச்சுவார்த்தை நடத்தினர். அதில் எந்த உடன்பாடும் ஏற்படாததால் நேற்று இரண்டாவது நாளாக ஒப்பந்த துாய்மை பணியாளர்கள் போராட்டத்தை தொடர்ந்தனர்.

தினமலர் WhatsApp Channel-ல் சேருங்கள்
Latest Tamil news, instantly on WhatsApp
Follow





      Dinamalar
      Follow us