தினமலர்
சினிமா
டிவி
Podcast
iPaper
கோயில்கள்
புத்தகங்கள்
Subscription
திருக்குறள்
கடல் தாமரை
Dinamalar Logo

 

/உள்ளூர் செய்திகள்/விழுப்புரம்/ துாய்மை பணியாளர்கள் ஆர்ப்பாட்டம்

 துாய்மை பணியாளர்கள் ஆர்ப்பாட்டம்

 துாய்மை பணியாளர்கள் ஆர்ப்பாட்டம்


ADDED : மார் 02, 2026 03:36 AM

Follow on GoogleFavourite on Google

ADDED : மார் 02, 2026 03:36 AM


Follow on Google
Latest Tamil News
அ நிறம் | அளவு

விழுப்புரம்: தமிழ்நாடு அரசு ஆரம்ப சுகாதார நிலைய ஆர்.சி.எட்ச்., துாய்மை பணியாளர்கள் நலச்சங்கம் சார்பில் கண்டன ஆர்ப்பாட்டம் நடந்தது.

விழுப்புரத்தில் நடந்த போராட்டத்திற்கு, மாநில தலைவர் செல்வராஜ் தலைமை தாங்கினார். மாவட்ட செயலாளர் சவுமியா, மாவட்டக்குழு விஜயலட்சுமி முன்னிலை வகித்தனர்.

ஏ.ஐ.டி.யூ.சி., மாவட்ட தலைவர் சவுரிராஜன் துவக்கவுரையாற்றினார். அரசு ஊழியர் சங்க முன்னாள் மாநில துணை தலைவர் சிங்காரம் கோரிக்கை விளக்கவுரையாற்றினார்.

இதில், பணிநீக்கம் செய்யப்பட்ட பொம்பூர் அரசு ஆரம்ப சுகாதார நிலைய துாய்மை பணியாளர் கலையரசிக்கு மீண்டும் பணி வழங்க வேண்டும் என்பன, உள்ளிட்ட பல்வேறு கோரிக்கைகளை வலியுறுத்தி கோஷங்கள் எழுப்பினர்.

மாவட்ட பொருளாளர் மணிமேகலை நன்றி கூறினார்.

தினமலர் WhatsApp Channel-ல் சேருங்கள்
Latest Tamil news, instantly on WhatsApp
Follow





      Dinamalar
      Follow us