/
உள்ளூர் செய்திகள்
/
விழுப்புரம்
/
சாலையை சீரமைக்க கோரி நாற்று நட்டு போராட்டம்
/
சாலையை சீரமைக்க கோரி நாற்று நட்டு போராட்டம்
ADDED : நவ 11, 2024 05:43 AM

நிறம் மற்றும் எழுத்துரு அளவு மாற்ற
விழுப்புரம்: விழுப்புரம் விராட்டிக்குப்பம் பாதையில், சாலையை சீரமைக்கக் கோரி மக்கள் நாற்று நட்டு போராட்டத்தில் ஈடுபட்டனர்.
விழுப்புரம் நகரில் உள்ள விராட்டிக்குப்பம் பாதை பகுதியில், பல இடங்களில் சாலை சீரமைக்காமல் உள்ளதால், மழை பெய்தால் மழைநீர் தேங்கி சாலையில் சேறும், சகதியுமாகிறது.
சாலையை சீரமைக்கக்கோரி பல முறை புகார் தெரிவித்தும் நடவடிக்கை இல்லை.
இதனைக் கண்டித்து, நேற்று காலை 9:00 மணிக்கு, அப்பகுதி மக்கள் சாலையில் நாற்று நடும் போராட்டத்தில் ஈடுபட்டனர்.
தகவல் அறிந்து சென்ற விழுப்புரம் டவுன் போலீசார், அவர்களை சமாதானப்படுத்தி கலைந்து போகச் செய்தனர்.