/
உள்ளூர் செய்திகள்
/
விழுப்புரம்
/
ஸ்குவாஷ் மாநில போட்டிக்கு சாரதா பள்ளி மாணவர்கள் தேர்வு
/
ஸ்குவாஷ் மாநில போட்டிக்கு சாரதா பள்ளி மாணவர்கள் தேர்வு
ஸ்குவாஷ் மாநில போட்டிக்கு சாரதா பள்ளி மாணவர்கள் தேர்வு
ஸ்குவாஷ் மாநில போட்டிக்கு சாரதா பள்ளி மாணவர்கள் தேர்வு
ADDED : ஜன 02, 2025 06:56 AM

விக்கிரவாண்டி: விழுப்புரம் சாரதா வித்யாலயா மேல்நிலைப்பள்ளி மாணவர்கள்
ஸ்குவாஷ் விளையாட்டில் மாநில போட்டிக்கு தேர்வு பெற்றனர்.
விழுப்புரம் மாவட்ட பள்ளி கல்வித்துறை சார்பில் நடந்த விளையாட்டு போட்டியில் சாரதா வித்யாலயா மேல்நிலைப்பள்ளி மாணவர்கள் 14 வயது முதல் 19 வயதுக்கு உட்பட்ட அமெரிக்கன் விளையாட்டான ஸ்குவாஷ் விளையாட்டில் மாணவர்கள் பர்ஹான்கான், அன்பு நிரஞ்சன், சையது இப்ராஹிம், வசந்தகுமார், பூவரசன்,கோகுலகிருஷ்ணன், மாணவிகள் ஹாசினி, ஹாரித்தா, வித்திகா, ரித்திகா, ஆப்ரின், ஹார்மிலா பானு, அருணா ,சவுந்தர்யலட்சுமி ஆகியோர் மாநில போட்டியில் பங்கேற்க தேர்வாகியுள்ளனர்.
மாணவர்களை பள்ளி தாளாளர் ராஜேந்திரன், பள்ளி முதல்வர் மணிமேகலை, உடற்கல்வி இயக்குனர் ரமேஷ் மற்றும் பள்ளி ஆசிரியர்கள் பாராட்டினர்.