/
உள்ளூர் செய்திகள்
/
விழுப்புரம்
/
மாநில அளவில் சிலம்பம் போட்டி சாரம் பிரான்சிஸ் பள்ளி முதலிடம்
/
மாநில அளவில் சிலம்பம் போட்டி சாரம் பிரான்சிஸ் பள்ளி முதலிடம்
மாநில அளவில் சிலம்பம் போட்டி சாரம் பிரான்சிஸ் பள்ளி முதலிடம்
மாநில அளவில் சிலம்பம் போட்டி சாரம் பிரான்சிஸ் பள்ளி முதலிடம்
ADDED : நவ 15, 2024 05:01 AM

திண்டிவனம்: தஞ்சாவூரில் மாநில அளவில் நடந்த சிலம்பம் போட்டியில் சாரம் புனித பிரான்சிஸ் பள்ளி மாணவர்கள் முதலிடம் பிடித்தனர்.
தஞ்சாவூரில், மாநில அளவில் ஓப்பன் சிலம்பம் போட்டி நடந்தது. இதில் 30 மாவட்டத்தில் இருந்து 1,500 மாணவ, மாணவியர்கள் பங்கேற்றனர்.
போட்டியில் திண்டிவனம் அடுத்த சாரம் புனித பிரான்சிஸ் மெட்ரிக் மேல்நிலைப் பள்ளியில் இருந்து 45 பேர், பங்கேற்று, ஒட்டுமொத்த அணிக்கான சுழற்கோப்பையை வென்று முதலிடம் பிடித்தனர்.
வெற்றி பெற்ற மாணவ, மாணவியர்கள் மற்றும் சிலம்பம் ஆசிரியர் ரோதான்ஜி ஆகியோரை பள்ளி முதல்வர் அந்தோணிசாமி, தாளாளர் ஜெயராஜ் மற்றும் ஆசிரியர்கள் பாராட்டினர்.