/
உள்ளூர் செய்திகள்
/
விழுப்புரம்
/
கனமழையால் பாதித்தவர்களுக்கு சசிகலா நிவாரணம் வழங்கல்
/
கனமழையால் பாதித்தவர்களுக்கு சசிகலா நிவாரணம் வழங்கல்
கனமழையால் பாதித்தவர்களுக்கு சசிகலா நிவாரணம் வழங்கல்
கனமழையால் பாதித்தவர்களுக்கு சசிகலா நிவாரணம் வழங்கல்
ADDED : டிச 04, 2024 08:18 AM

திண்டிவனம் : திண்டிவனத்தில் கன மழையால் பாதிக்கப்பட்டவர்களுக்கு சசிகலா நிவாரண உதவி வழங்கினார்.
திண்டினத்தில் கிடங்கல் ஏரியில் உடைப்பு ஏற்பட்ட பகுதிகள் மற்றும் வெள்ளத்தால் பாதிப்பிற்குள்ளான திண்டிவனம் கிடங்கல், நாகலாபுரம், முருங்கப்பாக்கம் உள்ளிட்ட பகுதிகளில் சசிகலா நேரில் பார்வையிட்டார்.
பின், பாதிக்கப்பட்டவர்களுக்கு ஆறுதல் கூறி நிவாரண பொருட்கள் வழங்கினர்.
திண்டிவனம் முன்னாள் நகர மன்ற துணைத் தலைவர் முகமதுெஷரீப் உள்ளிட்ட நிர்வாகிகள் உடனிருந்தனர்.
தொடர்ந்து மரக்காணம் நரிக்குறவர் காலனி, மண்டவாய் புதுக்குப்பம் மீனவர் பகுதி மற்றும் அம்பேத்கர் பகுதி உள்ளிட்ட இடங்களிலும் பார்வையிட்டு நிவாரணம் வழங்கினார்.