/
உள்ளூர் செய்திகள்
/
விழுப்புரம்
/
ஸ்ரீ பரணி மருத்துவமனையில் ஸ்கேன் சென்டர் திறப்பு விழா
/
ஸ்ரீ பரணி மருத்துவமனையில் ஸ்கேன் சென்டர் திறப்பு விழா
ஸ்ரீ பரணி மருத்துவமனையில் ஸ்கேன் சென்டர் திறப்பு விழா
ஸ்ரீ பரணி மருத்துவமனையில் ஸ்கேன் சென்டர் திறப்பு விழா
ADDED : நவ 18, 2024 06:51 AM

விழுப்புரம் : விழுப்புரத்தில் சேர்மன் சுப்பராயர் தெரு, ஸ்ரீபரணி எலும்பு முறிவு மற்றும் மூட்டு அறுவை சிகிச்சை முதன்மை மருத்துவமனையில், அதிநவீன விஷ்ணு ஸ்கேன் சென்டர் திறப்பு விழா நடந்தது.
ஓய்வுபெற்ற ஊராட்சி உதவி இயக்குனர் குப்புசாமி, உஷா, ரேணுகாதேவி ஆகியோர் திறந்து வைத்து குத்துவிளக்கேற்றினர். எலும்பு முறிவு மற்றும் மூட்டு அறுவை சிகிச்சை நிபுணர் டாக்டர் திருமாவளவன், டாக்டர் பூர்ணிமா, டாக்டர் விஷ்ணுகுமார் வரவேற்றனர்.
விழாவில், டாக்டர்கள், மருத்துவமனை ஊழியர்கள், செவிலியர்கள், உறவினர்கள், பொதுமக்கள் பங்கேற்றனர்.
பரணி மருத்துவமனையில், எலும்பு முறிவு மற்றும் மூட்டு அறுவை, பிளாஸ்டிக் அறுவை சிகிச்சை, முதுகெலும்பு அறுவை சிகிச்சை, பிசியோதெரபி சிகிச்சை, லேப்ராஸ்கோபி, ஆர்த்ரோஸ்கோபி சிகிச்சைகளும், டிஜிட்டல் எக்ஸ்ரே மற்றும் இசிஜி, நவீன ரத்த பரிசோதனை கூடம், தனி 'ஏசி' அறை, கணினி உதவியுடன் அறுவை சிகிச்சைகள் நடக்கிறது.
டிஜிட்டல் வசதி ஆபரேஷன் தியேட்டர், ஸ்கேன் வசதி (கலர் டாப்ளர்), முழு உடல் பரிசோதனை, உள்நோயாளிகள் பிரிவு வசதிகள் உள்ளன. மேலும், புதிதாக திறந்துள்ள விஷ்ணு ஸ்கேன்ஸ் சென்டரில், 'சிடி' ஸ்கேன்களாக தலை, இ.என்.டி., தைராய்டு, வயிறு, சிறுநீரகம், கர்ப்பபை ஸ்கேன், தண்டுவட ஸ்கேன், மார்பு ஸ்கேன், எலும்பு மற்றும் மூட்டு என அனைத்துக்கும் 'சிடி' ஸ்கேன் வசதிகள் உள்ளதாக, டாக்டர் திருமாவளவன் தெரிவித்தார்.