ADDED : மார் 04, 2024 12:25 AM

அ நிறம் | அளவு
விழுப்புரம் : விழுப்புரம் நாப்பாளைய தெருவில் உள்ள ஸ்ரீ வெங்கடேஸ்வரா மெட்ரிக் பள்ளியில் கே.ஜி., பட்டமளிப்பு விழா மற்றும் 52வது ஆண்டு விழா நடந்தது.
சொக்கலிங்கம் கல்வி அறக்கட்டளை சார்பில் நடந்த நிகழ்ச்சிக்கு, பள்ளி தாளாளர் செந்தில்குமார் தலைமை தாங்கினார்.
இயக்குனர் சுந்தர் முன்னிலை வகித்தார். கே.ஜி., மாணவ, மாணவிகளுக்கு பட்டங்களையும், விளையாட்டு போட்டிகளில் வென்ற மாணவர்களுக்கு பரிசு மற்றும் சான்றிதழை, சென்னை, ஆசிரியர் தேர்வாணைய இணை இயக்குனர் முனுசாமி, சின்னத்திரை இயக்குனர் ரத்தினம் வாசுதேவன் ஆகியோர் வழங்கினர்.
தொடர்ந்து, பள்ளி மாணவ, மாணவிகளின் கலை நிகழ்ச்சிகள் நடந்தது. பள்ளி ஆசிரியர்கள், பெற்றோர்கள் பங்கேற்றனர்.
