ADDED : ஜூன் 30, 2026 11:41 PM
அ நிறம் | அளவு
திண்டிவனம்: கணவரைக் காணவில்லை என மனைவி, போலீசில் புகார் அளித்துள்ளார்.
திண்டிவனம் - மரக்காணம் ரோடு விவேகானந்தா நகரைச் சேர்ந்தவர் எட்வின் பிரகாஷ், 46; மரக்காணம் அடுத்த நல்லாவூர் அரசுப் பள்ளி ஆசிரியர். மாலை நேரங்களில் இசைக் கச்சேரியில் பங்கேற்று வந்தார்.
கடந்த 28ம் தேதி காலை 11:30 மணியளவில், மனைவி நான்சிராணியிடம், கச்சேரிக்குச் செல்வதாக கூறிச் சென்றவர் வீடு திரும்பவில்லை. பல இடங்களில் தேடியும் கிடைக்கவில்லை. அவரது மொபைல்போன் சுவிட்ச் ஆப் செய்யப்பட்டுள்ளது.
இதுகுறித்து நான்சிராணி, 44; அளித்த புகாரின்பேரில், திண்டிவனம் போலீசார் வழக்குப் பதிந்து விசாரித்து வருகின்றனர்.
