நிறம் மற்றும் எழுத்துரு அளவு மாற்ற
விழுப்புரம்: பள்ளி மாணவி காணாமல் போனது குறித்து போலீசார் விசாரிக்கின்றனர்.
விழுப்புரம் அடுத்த சோழகனுார் கிராமத்தை சேர்ந்த முத்தழகன் மகள் சந்தியா, 16; இவர், எடப்பாளையம் அரசு பள்ளியில் பிளஸ் 2 படித்து வருகிறார்.
கடந்த 22ம் தேதி தும்பூரில் உள்ள உறவினர் வீட்டிற்கு செல்வதாக கூறி சென்றவர், காணாமல் போனார். பெற்றோர் பல இடங்களில் தேடியும் கிடைக்காததால், போலீசில் புகாரளித்தனர். விழுப்புரம் தாலுகா போலீசார் வழக்கு பதிந்து விசாரணை நடத்தி வருகின்றனர்.

