ADDED : மார் 02, 2024 10:58 PM

அ நிறம் | அளவு
வானுார்: ஆரோவில் அடுத்த குயிலாப்பாளையம் தனியார் மேல்நிலைப் பள்ளியில் அறிவியல் கண்காட்சி நடந்தது.
விழாவில், புதுச்சேரி மாநில அறிவியல் தொழில்நுட்பம் மற்றும் சுற்றுச்சூழல் துறை வல்லுநர் சுமதி தலைமை தாங்கி, கண்காட்சியை துவக்கி வைத்தார். பள்ளி தாளாளர் குணசீலன் வாழ்த்திப் பேசினார்.
புதுச்சேரி சத்யா சிறப்பு பள்ளி ஆசிரியர் சுந்தரமூர்த்தி, மாணவர்களின் சிறந்த படைப்புகளை பாராட்டினார். பள்ளி தலைமையாசிரியர் பிரகாஷ், விழா ஒருங்கிணைப்பாளர்கள் ரமேஷ், வீரராகு மற்றும் பள்ளியின் ஆசிரியர்கள், பெற்றோர்கள் கண்காட்சியை பார்வையிட்டனர். சிறந்த படைப்புகளுக்கு பரிசு வழங்கப்பட்டது.
