/
உள்ளூர் செய்திகள்
/
விழுப்புரம்
/
சம வேலைக்கு சம ஊதியம் கோரி இடைநிலை ஆசிரியர்கள் போராட்டம்
/
சம வேலைக்கு சம ஊதியம் கோரி இடைநிலை ஆசிரியர்கள் போராட்டம்
சம வேலைக்கு சம ஊதியம் கோரி இடைநிலை ஆசிரியர்கள் போராட்டம்
சம வேலைக்கு சம ஊதியம் கோரி இடைநிலை ஆசிரியர்கள் போராட்டம்
ADDED : ஜன 28, 2026 06:43 AM

விழுப்புரம்: சம வேலைக்கு சம ஊதியம் வழங்கக் கோரி, இடைநிலை ஆசிரியர்கள் விழுப்புரம் மாவட்ட முதன்மை கல்வி அலுவலக வளாகத்தில் காத்திருப்பு போராட்டத்தில் ஈடுபட்டனர்.
தி.மு.க., தேர்தல் அறிக்கையில் உறுதியளித்தபடி இடைநிலை ஆசிரியர்களுக்கு சம வேலைக்கு சம ஊதியம் வழங்கக் கோரி தமிழகம் முழுவதும் கடந்தாண்டு டிச., 26ம் தேதி முதல் தொடர் போராட்டத்தில் ஈடுபட்டு வருகின்றனர். இவர்களின் கோரிக்கை தற்போது வரை நிறைவேற்றப்படவில்லை. இதனால், இவர்கள் நேற்று 33வது நாளாக தொடர்ந்து போராட்டத்தில் ஈடுபட்டனர்.
இதையொட்டி, விழுப்புரம் மாவட்ட முதன்மை கல்வி அலுவலக வளாகத்தில் காத்திருப்பு போராட்டத்தில் ஈடுபட்டனர். இடைநிலை பதிவு மூப்பு ஆசிரியர்கள் இயக்கம் சார்பில் நடந்த போராட்டத்திற்கு, மாவட்ட தலைவர் ராஜகுமாரி தலைமை தாங்கி, கோரிக்கைகள் வலியுறுத்தி பேசினார். இதில், இடைநிலை ஆசிரியர்கள் பலர் கலந்து கொண்டனர்.