ADDED : ஏப் 04, 2026 08:45 PM

அ நிறம் | அளவு
விழுப்புரம்: விழுப்புரம் சட்டசபை தொகுதி மதச்சார்பற்ற முற்போக்கு கூட்டணி வேட்பாளர் லட்சுமணன் நிர்வாகிகளோடு ஊர்வலமாக சென்று வேட்பு மனுவை தாக்கல் செய்தார்.
விழுப்புரம் கலைஞர் அறிவாலயத்தில் இருந்து ஊர்வலமாக சென்றார். அப்போது, அண்ணாதுரை, கருணாநிதி, அம்பேத்கர் ஆகியோர் சிலைகளுக்கு மாலை அணிவித்து மரியாதை செலுத்தினார்.
மத்திய மாவட்ட காங்., தலைவர் சிவா, வி.சி., மாவட்ட செயலாளர் பெரியார், இந்திய கம்யூ., சவுரிராஜன், மா.கம்யூ., பாலசுப்ரமணியன், முன்னாள் எம்.எல்.ஏ., ராமமூர்த்தி, ம.தி.மு.க., பாபு கோவிந்தராஜ், ம.ம.க., முஸ்தாக்தீன், ம.நீ.ம., பாபு, தி.மு.க., நிர்வாகிகள் ஜனகராஜ், புஷ்பராஜ் உட்பட நிர்வாகிகள் பலர் பங்கேற்றனர்.
