தினமலர்
சினிமா
டிவி
Podcast
iPaper
கோயில்கள்
புத்தகங்கள்
Subscription
திருக்குறள்
கடல் தாமரை
Dinamalar Logo

 

/உள்ளூர் செய்திகள்/விழுப்புரம்/ பாதுகாப்பு விழிப்புணர்வு கருத்தரங்கு

 பாதுகாப்பு விழிப்புணர்வு கருத்தரங்கு

 பாதுகாப்பு விழிப்புணர்வு கருத்தரங்கு


ADDED : டிச 13, 2025 05:55 AM

Follow on GoogleFavourite on Google

ADDED : டிச 13, 2025 05:55 AM


Follow on Google
Latest Tamil News
அ நிறம் | அளவு

விழுப்புரம்: தமிழ்நாடு அரசு போக்குவரத்துக் கழக விழுப்புரம் மண்டல அலுவலகத்தில், விழிப்புணர்வு கருத்தரங்கு நடந்தது.

மண்டல மேலாண் இயக்குநர் குணசேகரன் தலைமை தாங்கினார். பாதுகாப்பான வாகன பயணம் மற்றும் விபத்தினை தவிர்க்கும் விழிப்புணர்வு குறித்து எஸ்.பி., சரவணன் பேசுகையில், 'டிரைவர்கள் சாலை விதிகளை பின்பற்ற வேண்டும்.

விபத்துகளால் ஏற்படும் உயிரிழப்புகள் மற்றும் காயங்களை தவிர்ப்பதே முக்கியம். வாகன டிரைவர்கள் தேவையான அளவு ஓய்வு எடுத்து, உடல்நலன்தளை பாதுகாப்பது அவசியம். உடற்பயிற்சி செய்து சிறந்த முறையில் பணியாற்றிட வேண்டும்' என்றார்.

விழுப்புரம், கடலுார், திருவண்ணாமலை மண்டலங்களைச் சேர்ந்த டிரைவர்கள் பங்கேற்றனர். அரசு போக்குவரத்து கழக மண்டல பொதுமேலாளர்கள் ரவீந்திரன் (தொழில் நுட்பம்), ஜெகதீஷ், முதுநிலை துணை மேலாளர் (மனிதவளம்) துரைசாமி, துணை மேலாளர அறிவண்ணல், உதவி மேலாளர்கள், அலுவலர்கள், பணியாளர்கள், தொழிற்சங்க பிரதிநிதிகள் பங்கேற்றனர்.

தினமலர் WhatsApp Channel-ல் சேருங்கள்
Latest Tamil news, instantly on WhatsApp
Follow





      Dinamalar
      Follow us