தினமலர்
சினிமா
டிவி
Podcast
iPaper
கோயில்கள்
புத்தகங்கள்
Subscription
திருக்குறள்
கடல் தாமரை
Dinamalar Logo

 

/உள்ளூர் செய்திகள்/விழுப்புரம்/ ரயில் நிலையத்தில் பாதுகாப்பு படை ஐ.ஜி., ஆய்வு

 ரயில் நிலையத்தில் பாதுகாப்பு படை ஐ.ஜி., ஆய்வு

 ரயில் நிலையத்தில் பாதுகாப்பு படை ஐ.ஜி., ஆய்வு


ADDED : பிப் 07, 2026 04:33 AM

Follow on GoogleFavourite on Google

ADDED : பிப் 07, 2026 04:33 AM


Follow on Google
Latest Tamil News
அ நிறம் | அளவு

திண்டிவனம்: திண்டிவனம் ரயில் நிலையத்தில் ரயில்வே பாதுகாப்பு படை ஐ.ஜி., ஆய்வு மேற்கொண்டார்.

நேற்று பிற்பகல் 2.30 மணியளவில், ஐ.ஜி., அருள்ஜோதி திடீர் ஆய்வு மேற்கொண்டார். ஆய்வின் போது, பயணிகளின் பாதுகாப்பில் கூடுதல் கவனம் செலுத்த வேண்டும். ரயில் நிலையத்தில் அத்துமீறி தண்டவாளங்களை கடப்பவர்கள் மீது வழக்கு பதிவு செய்ய வேண்டும்.

ரயில் போகும் போது, தண்டவாளத்தை கடப்பதால் ஏற்படும் உயிரிழப்பை தடுக்க நடவடிக்கை வேண்டும் என அறிவுரை வழங்கினார். தொடர்ந்து போலீசாரின் குறைகளைக் கேட்டறிந்தார்.

மேலும், காவல் நிலையத்தில் பராமரிக்கப்படும் ஆவணங்களை பார்வையிட்டார். ஆய்வின் போது, இன்ஸ்பெக்டர் சுனில்குமார், உதவி சப் இன்ஸ்பெக்டர்கள் தேசி, ஜோசப் கிருபாகரன் உடனிருந்தனர்

விழுப்புரம் விழுப்புரம் ரயில் நிலையத்திற்கு நேற்று மாலை 5:00 மணிக்கு வந்த சென்னை ஐ.ஜி., அருள்ஜோதி, ரயில் நிலையத்தில் பாதுகாப்பு வசதிகள் குறித்து ஆய்வு செய்தார். தொடர்ந்து, விழுப்புரம் ரயில்வே பாதுகாப்பு படை காவல் நிலையத்திற்கு சென்று, ஆண்டு ஆய்வு செய்தார்.

அங்கு ஆர்.பி.எப்., இன்ஸ்பெக்டர், சப் இன்ஸ்பெக்டர்கள் மற்றும் போலீசாருக்கு ஆலோசனை வழங்கினார். விழுப்புரம் ரயில் நிலையத்தில் பாதுகாப்பு நிலவரங்கள், ரயில்வே பயணிகளுக்கு தேவையான பாதுகாப்பு ஏற்பாடுகளின் நிலை, பாதுகாப்பை மேம்படுத்துவதற்கான வழிகள் குறித்து கேட்டறிந்தார்.

சென்னை மண்டலத்திற்குட்பட்ட திருச்சி ரயில்வே கோட்ட பகுதி ரயில் நிலைங்களின் பாதுகாப்பு, ரயில் பயணிகளுக்கான பாதுகாப்பு, உடமைகள், ரயில்வே தளவாடங்களின் பாதுகாப்பு குறித்தும், ரயில்களில் நடை பெறும் திருட்டுகள், குற்றவாளிகள், தொடர் குற்றவாளிகள் மீது எடுக்கப்பட்ட நடவடிக்கைகள் குறித்தும், விரிவாக கேட்டறிந்தார்.

ஒரு மணி நேரம் ஆய்வுக்குப்பின், சென்னை புறப்பட்டு சென்றார். ஆய்வின்போது, திருச்சி கோட்ட ரயில்வே அலுவலர் பிரசாந்த் யாதவ், ஆர்.பி.எப்., இன்ஸ்பெக்டர் குணசேகரன் இருந்தனர்.

தினமலர் WhatsApp Channel-ல் சேருங்கள்
Latest Tamil news, instantly on WhatsApp
Follow





      Dinamalar
      Follow us