/
உள்ளூர் செய்திகள்
/
விழுப்புரம்
/
மின்வேலியில் சிக்கி காவலாளி உயிரிழப்பு
/
மின்வேலியில் சிக்கி காவலாளி உயிரிழப்பு
ADDED : ஜூன் 25, 2025 01:20 AM
வானுார் : வானுார் அருகே மின் வேலியில் சிக்கி காவலாளி பரிதாபமாக இறந்தார்.
வானுார் அருகே புளிச்சப்பள்ளம் கிராமத்தை சேர்ந்தவர் ரவி, 59; இவர், ஒழுந்தியாம்பட்டு கிராமத்தில் உள்ள வரதன் என்பவரின் நிலத்தில் காவலாளியாக பணிபுரிந்தார்.
நேற்று முன்தினம் காலை 7.00 மணிக்கு வழக்கம் போல் பணிக்கு சென்ற ரவி, மாலை வீடு திரும்பவில்லை. ரவியின் மகன் மாரிமுத்து தந்தையை தேடி பணி செய்யும் இடத்திற்கு சென்று பார்த்த போது, மின்வேலியில் சிக்கி ரவி இறந்து கிடந்தது தெரியவந்தது.
புகாரின் பேரில் கிளியனுார் போலீசார் வழக்குப் பதிந்து இறந்த ரவியின் உடலை கைப்பற்றி, கனகசெட்டிக்குளம் தனியார் மருத்துமவனைக்கு அனுப்பி வைத்தனர்.
விவசாய பயிர்களை வீணாக்கும் பன்றிகளுக்காக நிலத்தில் வைத்த மின்வேலியில் சிக்கி தொழிலாளி இறந்த சம்பவம் அப்பகுதியில் சோகத்தை ஏற்படுத்தியது.