தினமலர்
சினிமா
டிவி
Podcast
iPaper
கோயில்கள்
புத்தகங்கள்
Subscription
திருக்குறள்
கடல் தாமரை
Dinamalar Logo

 

/உள்ளூர் செய்திகள்/விழுப்புரம்/ பாதுகாப்பு அலுவலர் பணியிடம் : கலெக்டர் தகவல்

 பாதுகாப்பு அலுவலர் பணியிடம் : கலெக்டர் தகவல்

 பாதுகாப்பு அலுவலர் பணியிடம் : கலெக்டர் தகவல்


ADDED : செப் 19, 2026 03:35 AM

Follow on GoogleFavourite on Google

ADDED : செப் 19, 2026 03:35 AM


Follow on Google
அ நிறம் | அளவு

விழுப்புரம்: மாவட்ட குழந்தைகள் பாதுகாப்பு அலகில் பாதுகாப்பு அலுவலர் பணியிடத்திற்கு விண்ணப்பங்கள் வரவேற்கப்படுகிறது.

கலெக்டர் ேஷக் அப்துல் ரஹ்மான் செய்திக்குறிப்பு;

விழுப்புரம் மாவட்ட குழந்தைகள் பாதுகாப்பு அலகில் பாதுகாப்பு அலுவலர் (நிறுவனம் சாரா) ஒரு பணியிடம் காலியாக உள்ளது. இப்பணியிடம் ஓராண்டு கால ஒப்பந்த தொகுப்பூதிய அடிப்படையில் பூர்த்தி செய்யப்படவுள்ளது. இப்பணிக்கான ஊதியம் 27,804 ரூபாய் வழங்கப்படும். விண்ணப்பதாரர்கள் 42 வயத்திற்குட்பட்டவராக இருக்க வேண்டும். இதற்கான விண்ணப்ப படிவத்தை விழுப்புரம் மாவட்ட இணையதளத்தில் பதிவிறக்கம் செய்துகொள்ளலாம் அ ல்லது விழுப்புரம் மாவட்ட குழந்தைகள் பாதுகாப்பு அலகிலிருந்து பெற்றுக்கொள்ளலாம். தகுதி வாய்ந்த நபர்கள் படிவத்தில் பூர்த்தி செய்து வரும் 24ம் தேதி மாலை 5:00 மணிக்குள் மாவட்ட குழந்தைகள் பாதுகாப்பு அலகு, மாவட்ட கலெக்டர் அலுவலக வளாகம்,விழுப்புரம் 605 602 என்ற முகவரிக்கு அனுப்பி வைக்கலாம். அல்லது 04146 -290659 என்ற தொலைபேசி எண்ணில் தொடர்பு கொள்ளலாம். இப்பணி முற்றிலும் தற்காலிக அடிப்படையிலானது.

இவ்வாறு அதில் கூறப்பட்டுள்ளது.

தினமலர் WhatsApp Channel-ல் சேருங்கள்
Latest Tamil news, instantly on WhatsApp
Follow





      Dinamalar
      Follow us