/
உள்ளூர் செய்திகள்
/
விழுப்புரம்
/
விதைப்பண்ணை ஊழியர் மயங்கி விழுந்து பலி
/
விதைப்பண்ணை ஊழியர் மயங்கி விழுந்து பலி
ADDED : ஜூலை 02, 2025 06:22 AM
விழுப்புரம் : விழுப்புரத்தில் விதைப்பண்ணை ஊழியர் பஸ் நிலையத்தில் மயங்கி விழுந்து உயிரிழந்தார்.
விழுப்புரம் அடுத்த நரையூர் கிராமத்தை சேர்ந்த அங்கப்பன்,49; விழுப்புரத்தில் உள்ள தனியார் விதை பண்ணையில், ஊழியராக பணியாற்றி வந்தார்.
நேற்று முன்தினம் மாலை, வழக்கம் போல் வேலை முடிந்து வீட்டிற்கு செல்ல, விழுப்புரம் புதிய பஸ் நிலையம் சென்றார். அங்கு பஸ்ஸில் ஏற நடந்த சென்றவர், திடீரென மயங்கி கீழே விழுந்தார்.
அங்கிருந்த பொதுமக்கள், அவரை மீட்டு முண்டியம்பாக்கம் அரசு மருத்துவக்கல்லூரி மருத்துவமனைக்கு அனுப்பி வைத்தனர். ஆனால், அவர் அங்கு செல்லும் வழியிலேயே இறந்து விட்டார்.
விழுப்புரம் தாலுகா போலீசார் வழக்கு பதிந்து விசாரிக்கின்றனர்.